Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விஜய் பிறந்தநாளன்று செம ட்ரீட்.. ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் அடுத்த அடுத்த அப்டேட்

விஜய் பிறந்தநாளன்று செம ட்ரீட்.. ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் அடுத்த அடுத்த அப்டேட்

விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜூ தயாரிக்கிறார். மேலும், இப்படம் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படம் என்பதால் ஏராளமான திரை பிரபலங்கள் இப்படத்தில் […]

விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜூ தயாரிக்கிறார். மேலும், இப்படம் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படம் என்பதால் ஏராளமான திரை பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தில் விஜய்யின் கெட்டப் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எப்பொழுதும் விஜய் தனது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது பிறந்தநாள் அன்று வெளியிடுவார்.

அதேபோல் தளபதி 66 படத்தின் டைட்டில் உடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இதே நாளில் மற்றொரு விஷயமும் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. எப்போதும் விஜய் தான் நடிக்கும் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுப்பார்.

ஆனால் இந்த முறை தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தளபதி 67 படத்திற்கான அப்டேட் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகயுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது வரை இப்படத்தின் வசூலை எந்த படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 67 என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும்.

இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் உடன் தளபதி 67 படத்திற்கான தயாரிப்பாளர் யார் என்பதும் தெரியவரும். இவ்வாறு விஜய்யின் பிறந்தநாள் அன்று தளபதி 66 மற்றும் தளபதி 67 படத்திற்கான அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களை திக்குமுக்காட செய்யவுள்ளனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.