Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சனின் அடுத்த படம் என்ன? மாஸ் அப்டேட்

ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சனின் அடுத்த படம் என்ன? மாஸ் அப்டேட்

ஜெயிலர் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்து எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரம்மாண்டமான திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் ரெட்ரோ பாணியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை முடித்த பிறகு, ஏற்கனவே பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்களைத் தனது படங்களில் நடிக்க வைத்து கலக்கி வரும் நெல்சன், தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான நாக வம்சியின் Sithara Entertainments நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, அதன் பிறகு தனுஷுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் நெல்சனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்!

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.