தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கியமான படம் “அரசன்”.
சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படத்தின் “ஃபயறு” (“Fire”) ப்ரோமோ பாடல் வெளியாகி வைரலானது. மேலும், சிம்பு அரிவாளோடு நிற்கும் அந்த போஸ்டரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் பாடலை 808 Krishna உருவாக்கியதாகவும், இதனால் அனிருத் அப்படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் பரவத் தொடங்கியிருக்கின்றன.
படக்குழு இச்செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனினும்,
வெற்றிமாறன், அனிருத் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்றும், கால்ஷீட் பிரச்சினை என்றும் இந்த விலகலுக்குப் பல்வேறு காரணங்கள் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகின்றன.
சிம்பு – அனிருத் கூட்டணி முதல்முறையாக இணையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில், இச்செய்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அரசன் படத்தின் BGM ட்ரெண்டாகி கலக்கியது குறிப்பிடத்தக்கது.
அனிருத்தின் BGM இல்லாமல் அரசன் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?




