இந்தாண்டு துபாயில் நடைபெற்ற FIFA 2022 கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அணி வென்றது. வெற்றியின் கோப்பையை அந்த அணியின் கேப்டனும் உலகப் புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி வாங்கினார். இதனிடையே கடைசி போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் மோதிய பிரான்ஸ் அணியினர் தோல்வியுற்று இருந்தாலும், அவர்களின் ஆட்டம் பெரிதளவு உலகம் முழுதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடம் பாராட்டப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த அணியின் கேப்டனான கிலி எம்பாப்வே பற்றிய ஸ்வாரஸ்யமான தகவலை தற்போது பார்க்கலாம். கிலி எம்பாப்வே சிறு வயதில் இருந்தே உலக புகழ் பெற்ற போர்டுகள் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகராவார். இந்நிலையில் தனது 12 வயதில் ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட கிலி எம்பாப்வே, அவரை ரோல் மாடலாக வைத்துக்கொண்டு தனது வீட்டில் ரொனால்டோவின் புகைப்படங்களை ஒட்டி ரசித்து வந்துள்ளார்.
பின்னர் கால்பந்து மீது தனது ஆர்வத்தை நிரூபித்து கடினமாக உழைத்து தனது 18 வது வயதிலேயே இன்டர்நேஷனல் கால்பந்தாட்டம் ஆட்டத்தில் விளையாட முன்னேறினார். அந்த போட்டியில் தான் தனது ஆஸ்தான நாயகன் ரொனால்டோவுடன் முதன்முதலில் மோதினார் கிலி எம்பாப்வே. 23 வயது வரை 300க்கும் மேற்பட்ட கால்பந்தாட்டத்தில் விளையாடிய கிலி எம்பாப்வே தற்போது வரை 200க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்டர்நேஷனல் கால்பந்தாட்ட போட்டியில், இவருக்கு 1500 கோடி வரை இந்திய மதிப்பின்படி சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் தனது சம்பளத்தில் ஒரு ரூபாயை கூட தனக்கென்று எடுக்காமல், மொத்த பணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார் கிலி எம்பாப்வே. மேலும் தன் தாய்நாட்டிற்காக கால்பந்து விளையாடுகிறேன், பணத்திற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தது பலரையும் நெகிழடைய வைத்தது.
இந்தாண்டு அர்ஜென்டினாவுடன் மோதிய பிரான்ஸ் அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் இருந்த நிலையில் வெற்றிக்கு மிக அருகில் இருந்தது. ஆனால் கிலி எம்பாப்வேவின் வேகமான ஆட்டம் அர்ஜென்டினாவை சில நிமிடங்கள் கதிகலங்க வைத்தது. அதன் பின்னர் கடைசி கோலினை அடித்த அர்ஜென்டினா அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. கிலி எம்பாப்வே ஓட்டத்தை கண்ட பலரும், ஓட்டப்பந்தய நாயகன் ஹுசைன் போல்ட்டுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அவரது ஆட்டம் இருக்கும்.
இன்னும் கால்பந்தாட்ட ரசிகர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என உலகம் முழுக்க கூறிக்கொண்டு வரும் நிலையில், சிங்கம் போல கம்பீரமாய் கால்பந்தாட்ட வரலாற்றில் புது சாதனைகளை பதித்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார் கிலி எம்பாப்வே. மேலும் வருங்கால கால்பந்தாட்ட உலகின் அரக்கன் என்றும் கிலி எம்பாப்வே பேசப்பட்டு வருகிறார்.