சினிமா செய்திகள்

பனையூரில் ஆஜர் ஆன ஆதவ் அர்ஜுனா.. திமுகவுக்கு கட்டம் கட்ட விஜய்யுடன் கை கோர்க்கும் அதிமுக, நதக பெரும் புள்ளிகள்!

By · 31 ஜன 2025 · Updated 08 மார்ச் 2026
TVK vs DMK

Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் நாளுக்கு நாள் தமிழகத்தின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தன்னுடைய பயணத்தை அவர் தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் தேர்தல் வேலைகள் சரிவர நடப்பதற்கு ஏதுவாக தமிழகத்தை 120 மாவட்டங்களாக பிரித்து இருக்கிறார்கள்.

அந்த மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் மூன்றாம் கட்ட அறிவிப்பு இன்று நிர்வாகிகள் முன்னிலையில் பனையூரில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வுக்கு முன் கட்சியில் சில முக்கிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

பனையூரில் ஆஜர் ஆன ஆதவ் அர்ஜுனா

ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து விலகியதிலிருந்து அவர் விஜய்யுடன் தான் கைகோர்ப்பார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா விஜய் சந்தித்தார். இந்த நிலையில் இன்று ஆதார் அர்ஜுனா பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.

மேலும் அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமாரும் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

அத்தோடு சேர்த்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கிறாராம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.