திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரோலக்ஸ் சூர்யாவைப் போல் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.. தளபதி 67-ல் முரட்டு மீசையுடன் வைரல் புகைப்படம்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி லோகேஷ் கண்டிப்பாக இந்த படத்திற்காக ஏதாவது வித்தியாசமாக செய்வார்.

இந்தப் படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூரலிகான் மற்றும் அர்ஜுன் போன்ற பல நடிகர்கள் பட்டாளம் நடிக்க இருக்கிறார்கள். கூடுதலாக இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சியான் விக்ரமும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.

Also read: லோகேஷ் LCUவில் AK?. ஒரே படத்தில் மோத போகும் அஜித், விஜய்

ஏற்கனவே விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அதேபோலவே தளபதி 67 படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பால் மிரட்டப் போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. லோகேஷ் இதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்.

இதன் அடுத்தகட்டமாக தளபதி 67 படத்தில் அர்ஜுன் வைட் ஷர்ட் போட்டு முரட்டு மீசையுடன் மற்றும் முறுக்கு தாடியுடன் இருக்கக்கூடிய புகைப்படம் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இதுவரை அர்ஜுனை நம்ம பல கெட்டப்பில் பார்த்திருப்போம் ஆனால் இது ரொம்பவே வித்தியாசமான கெட்டப்பாக இருக்கிறது. இதுவே இந்த படத்தின் மீதான ஆவலை தூண்டுகிறது.

Also read: சத்தமில்லால் அடி வாங்கிய விஜய் பட தயாரிப்பாளர்கள்.. அஜித் வைத்த ஆப்பு

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் காம்போ பெரிய அளவில் வெற்றி படத்தை கொடுத்தார்கள். அதேபோலவே விஜய் அர்ஜுன் காம்போ இந்த படத்திலும் வெற்றியை கொடுக்கும் என்று ரசிகர்கள் பேசப்படுகிறார்கள்.

மேலும் இந்த படத்திற்கான புதிய அப்டேட் வருகிற பிப்ரவரி 1,2,3 இல் ரிலீஸ் ஆகும் என அறிவிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் புதிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முரட்டு மீசையுடன் மற்றும் முறுக்கு தாடியுடன்

arjun-thalapathy-67

Also read: புரியாத புதிராக லோகேஷ் அளித்த ஷாக்கிங் பதில்..தளபதி 67 இல் விக்ரம் இருக்காரா?

Trending News