கமல்ஹாசன் சினிமாவில் ஒருவர் மீது அவ்வளவு எளிதாக நம்பிக்கை வைக்க மாட்டார். அப்படி வைத்து விட்டார் என்றால் அவர்களிடம் ஏதோ சம்திங் இருக்கிறது என்று தான் அர்த்தம். அப்படி ரீசன்டாக ஒருவரை நம்பி அவரிடம் தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களை கொடுத்து வருகிறார்.
கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜிகளை கற்றுக்கொண்டு அதிலும் தன்னுடைய ஆற்றலை காண்பிக்க விரும்புகிறார். தக் லைஃப் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது இதனால் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளை கையில் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் ஹிட்டான அமரன் படத்தால் டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறார். அந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் பரிசு பொருட்கள் கொடுக்க திட்டமிட்டு வருகிறார். அமரன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஜிவி பிரகாஷ் தான் இப்பொழுது அவருக்கு செல்ல குட்டியாக மாறி உள்ளார்.
அமரன் படத்தில் பேக்ரவுண்ட் மியூசிக் மற்றும் ரி ரெக்கார்டிங் செமையாக வந்துள்ளது. இதில் மிகவும் கவர்ந்து போன கமலஹாசன் அடுத்தடுத்து தன்னுடைய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம்.
தக் லைஃப் படம் ரிலீஸ் ஆன பிறகு அடுத்து மாஸ்டர்கள் அன்பறிவு பிரதர்ஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல். இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.அமரன் படத்தை வைத்து கமலின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விட்டார் ஜிவி பிரகாஷ். தற்போது தான் அவரது காதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார் இந்த விவகாரமான தம்பி.