வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலின் நெருக்கமான 5 இயக்குனர்கள்.. 30 வருட காலம் கூடவே கூட்டி வரும் ஜாம்பவான்கள்

Actor Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் 60 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். பல இளம் இயக்குனர்களுடன் தற்போது இவர் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், இவருக்கென்று மனதிற்கு நெருக்கமான ஐந்து இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்களை எப்பொழுதுமே கமலஹாசன் விட்டுக் கொடுத்ததே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த ஐந்து பேரும் கமலுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்து இருக்கிறார்கள்.

மௌலி: நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருந்தவர் தான் மௌலி. இவருடைய நடிப்பும் சரி, திரைக்கதை வசனங்களும் சரி ரொம்பவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் வித்தியாசமானதாகவும் இருக்கும். மௌலி கமலஹாசன் மற்றும் சிம்ரனை வைத்து 2002 ஆம் ஆண்டு பம்மல் கே சம்பந்தம் என்னும் ஹிட் படத்தை இயக்கினார். 2003 ஆம் ஆண்டு இவர் இயக்கிய நள தமயந்தி திரைப்படத்தை கமலஹாசன் தான் தயாரித்தார்.

Also Read:கமலை தாரவாத்துக் கொடுத்த ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்டவர்

சந்தான பாரதி: சந்தான பாரதி ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தேசிய விருது இயக்குனரும் ஆவார். இவர் நடிகர் கமலஹாசனை வைத்து குணா மற்றும் மகாநதி என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் பெரும்பாலும் தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு சந்தான பாரதிக்கு வாய்ப்பு கொடுத்து விடுவார்.

கே எஸ் ரவிக்குமார் : இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் இணைந்தால் கண்டிப்பாக அந்தப் படத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இவர்கள் இருவருடைய கூட்டணியில் அவ்வை சண்முகி மற்றும் பஞ்சதந்திரம் திரைப்படங்கள் என்றுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேவரிட் படங்களாக இருக்கின்றன. இதற்கு கிரேசி மோகனின் வசனமும் ஒரு முக்கிய காரணம்.

Also Read:ஆண்டவர் கமல் இடத்தைப் பிடிக்க தகுதியான 5 நடிகர்கள்.. ஐந்தே நிமிடத்தில் ஸ்கோர் செய்த ரோலக்ஸ்

மணிரத்னம்: உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான படங்களில் மிக முக்கியமான ஒன்று நாயகன். இந்த படம் கமலஹாசன் மற்றும் மணிரத்னம் இருவருக்குமே சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது 30 வருடங்கள் கழித்து கமல் தன்னுடைய 234 வது படத்தில் மணிரத்தினத்துடன் இணைய இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

எஸ் பி முத்துராமன் : கமலஹாசன் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது அவரை நம்பி பல படங்களை இயக்கிய இயக்குனர் தான் எஸ் பி முத்துராமன். கமலஹாசனை உலக நாயகனாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமான ஒன்று. இன்று வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு முத்துராமன் ஒதுங்கி இருந்தாலும் எந்த ஒரு பொது மேடையிலும் அவரைப் பற்றி கமல் பேசாமல் இருந்ததே இல்லை. அப்போது என்ன மரியாதை கொடுத்தாரோ அதே மரியாதையுடன் இன்று வரை முத்துராமனுடன் பழகி வருகிறார்.

Also Read:சறுக்கிய நேரத்தில் கை கொடுத்த கமல்.. ஆண்டவரை இம்ப்ரஸ் செய்த வினோத், KH 233 உருவான சீக்ரெட்

Trending News