ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

KH233 – பரபரப்பை ஏற்படுத்திய கமல்- வினோத் கூட்டணி.. பக்கா பிளான் போட்டு டீலில் விட்ட ஆண்டவர்

Kamal Haasan- H.Vinoth: தற்போதைய தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் தான். கைவசம் நான்கு படங்கள் இருப்பதோடு, அடுத்தடுத்து தயாரிப்பு என அதகளப்படுத்தி வருகிறார். சமீபத்தில் கமலின் 233 வது படத்தைப் பற்றி வெளியாகி இருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகர் அஜித்குமாரை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைந்து கமல்ஹாசன் தன்னுடைய 233 வது படத்தின் பணி புரிய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த புகைப்படங்களை வைத்து இவர்கள் அடுத்த படம் பண்ண இருப்பது ஓரளவுக்கு உறுதியாகியது. தற்போது கமல் தன்னுடைய அடுத்த கட்ட நகர்விற்காக இந்த படத்தை டீலில் விட்டது போல் தெரிகிறது.

Also Read:3வது இடத்திற்கு போட்டி போட்ட கார்த்திக்.. கமல், ரஜினியை முந்த செய்த வேலை

நடிகர் கமலஹாசன், ப்ராஜெக்ட் கே என்னும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் இணைந்து நடிப்பது கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக உறுதியாகியது. இந்த படத்தில் கமலஹாசன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இவருக்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முடித்த கையோடு கமல் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் .

மேலும் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய வெற்றி இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து படம் பண்ண இருக்கிறார் கமல். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் KH234 என சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து ஸ்கெட்ச் போட்ட கமல் வினோத்தின் படத்தை டீலில் விட்டு விட்டார். இந்தப் படத்திற்கு பல்க்காக கால்ஷீட் கொடுப்பதில் விருப்பம் இல்லாத கமல் ஐந்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறாராம்.

Also Read:கமல் கொடுத்த டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஒரே போடாக போட்ட பயில்வான்

மேலும் இந்த படத்திற்கு ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. துணிவு திரைப்படம் முடிந்த கையோடு வினோத், யோகி பாபு வைத்து ஒரு படம் பண்ண இருப்பதாக அறிவித்திருந்தார். ஒருவேளை அது தான் இந்த படமா, யோகி பாபுவின் படத்தில் தான் கமல் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறாரா என்று சந்தேகமும் எழுந்திருக்கிறது. கமல் தற்போது ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்காக முழுக்க முழுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இளம் ஹீரோக்களுக்கு இணையாக கமல் தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருவதோடு, படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமலின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Also Read:பப்ளிசிட்டிக்காக பண்ற வேலை.. கமல் காரெல்லாம் கொடுக்கல ஷர்மிளா தந்தை

Trending News