திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

1000 கோடி பட்ஜெட்டில் கமல் கைவசம் இருக்கும் 4 படங்கள்.. உலகநாயகனுக்கே ட்ரெய்னிங் கொடுக்கும் ஹெச்.வினோத்

Kamal Haasan Upcoming Projects: கமலஹாசன் வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பதே பெரிய விஷயம் என்று சில வருடங்களாக போய்க் கொண்டிருந்த நிலையில், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உலகநாயகர் கமலஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி அப்டேட் மழைகளை பொழிந்து கொண்டிருந்தார். இவருடைய கைவசம் இருக்கும் படங்கள் என்னென்ன, எப்போது படவேலைகள் ஆரம்பிக்க இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7: ஆண்டவரின் தரிசனம் உடனடியாக ரசிகர்களுக்கு கிடைக்க இருப்பது பிக் பாஸ் சீசன் 7 மூலம்தான். ஒரு தொகுப்பாளராக ஆறு வருடங்களாக நேயர்களே கவர்ந்து வந்த கமல், தற்போது ஏழாவது வருடத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

Also Read:கமலை வைத்து ரஜினியை சுளுக்கு எடுக்கும் ப்ளூ சட்டை.. நாயகன் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட பீதி

இந்தியன் 2: உலக நாயகன் கமலஹாசனின் இப்போதைய கனவு படம் என்றால் அது இந்தியன் 2 தான். ஏனென்றால் இந்த படத்திற்காக அவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக காத்து கிடந்திருக்கிறார். தற்போது படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898AD: அட உலகநாயகன் கமலஹாசன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறாரா என அவருடைய ரசிகர்கள் சந்தோஷப்பட்டது இந்த படத்தின் அப்டேட் வந்த பிறகுதான். இந்த படத்தில் கமல் இளம் ஹீரோவான பிரபாஸ் மற்றும் தன்னுடைய பழைய நண்பரான அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் ராஜமௌலியும் இணைந்து இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு 20 நாட்கள் மட்டுமே கமல் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Also Read:இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான ஹெச்.வினோத்

KH 233: கமல் இயக்குனர் ஹெச். வினோத்துடன் இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த படம் ராணுவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதை ஆகும். இதற்காக தற்போது உலகநாயகன் துப்பாக்கி பயிற்சிகள் எடுத்து வருகிறார். இது குறித்த வீடியோ கூட சமீபத்தில் வெளியாகியது.

KH 234: கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு உலகநாயகன் கமலஹாசனும், மணிரத்தினமும் இந்த படத்தில் இணைகிறார்கள். மேலும் நடிகை திரிஷாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்த படத்திற்கான ப்ரோமோவை பட குழு அக்டோபரில் சூட் செய்ய இருக்கிறது.

Also Read:பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

Trending News