திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உலக நாயகன் தயாரித்து முக்காடு போட்ட 5 படங்கள்.. முழு சொத்தை முழுங்கிய விஸ்வரூபம்

Actor Kamal produced failure movies: தனது சிந்தனையாலும் செயலாலும் காலத்திற்கு முந்தியவர் கமல். அவர் ஒவ்வொரு தமிழ் ரசிகனின் ரசிக்கும் தன்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பயணப்படுகிறார். ரசிகர்களாகிய நாமோ அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிப்பதால் வந்த விளைவே இந்த தோல்வி. பல காலங்களுக்குப் பின் கொண்டாடப்படும் கமலின் படங்கள் வந்த புதிதில் வெற்றி பெறாதது காலத்தின் கொடுமையே!

உலகநாயகன் கமல் பல வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும் அவரின் சில தோல்விகளால் தயாரிப்பாளர்கள் இவரின் கதைக்கு படம் எடுக்க அஞ்சிய வேளையில் தானே தயாரிப்பாளராக உருவெடுத்தார். சினிமாவில் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாத அவர் தன் சம்பாதித்ததே சினிமாவுக்கே அர்ப்பணிக்கவும் தயாராகிவிட்டார். அவர் தயாரித்து வசூல் ரீதியாக நஷ்டம் அடைந்த படங்கள் இதோ

விருமாண்டி: சண்டியர் என முதலில் பெயரிடப்பட்டு பின்பு பெயர் மாற்றம் செய்யப்பட்ட விருமாண்டி, படம் வெளிவரும் முன்பே பல சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “உன்ன விட இந்த உலகத்துல ஒசந்தது ஒன்னும் இல்ல” என்று நிரூபித்து  இருந்தார் கமல். இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் 2004  சிறந்த ஆசிய படமாக விருமாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. படத்தில் பலரையும் வன்மையாக தாக்கி மரண தண்டனை தேவையா என்ற கருத்தை முன் வைத்தார்.

ஹேராம்: இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற சம்பவங்களை ஹேராமில் கொண்டு வந்து மத நல்லிணக்கம், அகிம்சை, வன்முறையை கையில் எடுப்பதால் வரும் குற்ற உணர்வு என அனைத்து உணர்ச்சிகளையும்  ஒரு சேர ஹேராமில் வெளிப்படுத்தி இருப்பார். இப்படம் ஆஸ்காருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

Also read: பருத்திவீரன் போல் கமலால் நஷ்டமான படம்.. இன்று வரை ஆண்டவரிடம் விரோதம் காட்டும் தயாரிப்பாளர்

உத்தம வில்லன்: தன் சொந்த கதையின் சில பகுதிகள் என சொல்லி படம் எடுக்கும்  தைரியம் கமலை தவிர யாருக்கும் இல்லை எனலாம். உத்தம வில்லனில் நடிகனாகவே நடித்து இருப்பார். தன் குரு பாலச்சந்திரருடன் இணைந்து குருவை மிஞ்சும் சிஷ்யனாக நடித்து “கலைஞனுக்கு அழிவு உண்டு. கலைக்கு அழிவு இல்லை. மரணித்த பின்னும் தன் கலையை மற்றவர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும்.” என்று சொல்வதையே உத்தமவில்லனிலும் செய்தார்.

மும்பை எக்ஸ்பிரஸ்: இன்று நடைமுறையில் இருக்கும் பிளாக் காமெடி வகையை 18 வருடங்களுக்கு முன் தன் படத்தில் கையாண்டவர் கமல். அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு சிலரே இப்படத்தை  புரிந்து விழுந்து விழுந்து சிரிக்க, புரியாதவரோ புரிந்தவரை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தனர். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 2005 வெளிவந்த இப்படத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, பசுபதி, நாசர் நடித்துருந்தனர்.

விஸ்வரூபம்:  “வேளை வந்து சேரும்போது வெளிப்படும் சுயரூபம்” என்று விஸ்வரூபம் காட்டி இருந்தார் கமல்.  தன் சொத்துக்கள் முழுவதையும் இப்படத்தில் முதலீடு செய்து வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்க படமோ வெளிவர இயலாமல் அரும்பாடு பட கமலஹாசன் அத்தனை தடைகளையும் உடைத்து எறிந்து மீண்டும் தன் விஸ்வரூபத்தை காட்டினார்.

மகாநதியில் கமல் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!” என்று பாரதியின் வசனத்தை கூறுவார் இது உண்மையே. தனக்கு ஏற்பட்ட  அத்தனை தோல்விகளையும் விழ்த்தி அக்னி சிறகென மீண்டும் பல மடங்கு வேகத்துடன் துளிர்த்து வருவது கமல் மட்டுமே. அது போல்   தான் நடித்த தோல்வி படங்களின் மூலமே நிகரில்லாத தனது நடிப்பை பலரும் பேச வைத்திருப்பார் அவர்.

Also read: பிக்பாஸின் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை.. கமல் வாங்கிய சம்பள பட்டியல்

Trending News