திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

3 வருடங்களுக்கு வரிசை கட்டி நிற்கும் கமலின் 7 படங்கள்.. விக்ரமை மிஞ்சுமா கமலின் KH237?

Actor Kamal upcoming movies and KH237 update: “சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் உன் சோதனை முயற்சி சோர்வுரவில்லை” என்று படத்திற்கு படம் வித்தியாசமான சோதனை முயற்சிகளை செய்து ரசிகர்களை புதிய பரிமாணத்திற்கு அழைத்து செல்வதில் உலகநாயகன் கமல்ஹாசனின் பங்கு அளப்பரியது.

கலைக்கு வயது ஒரு தடை இல்லை என நிரூபித்து திரைத்துறையில் பல சாதனைகளை புரிந்து வரும் கமலின் நடிப்பில் உருவாக உள்ள படங்களை காணலாம்.

இந்தியன் 2 மற்றும் 3: சங்கரின் இயக்கத்தில்  ஊழலுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியன் 2 வை முடித்து விட்டனர். தொடர்ந்து இந்தியன் 3 யையும் எடுத்து நடித்து வருகின்றார் கமல். இந்த ஆண்டு இந்த இரண்டு பாகங்களையும் வெளியிட்டு சாதனை  புரிவது என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்.

கல்கி 2898 AD: நாக அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்றுப்பதாகவும் இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த படத்திற்கு கமலஹாசனுக்கு மட்டும் 150 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.

Also read: ஆஹா! ரஜினி கமல் இடத்திற்கு போட்டியா களமிறங்கும் ஷார்ப் ஹீரோ.. 35 வருடத்திற்கு அப்புறம் தமிழில் போடப்போகும் பட்டறை

KH233: எச் வினோத் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சிவராஜ்குமார் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் கமலின் கால்ஷீட் கிடைக்காமல் பேச்சுவார்த்தையுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

KH234: கமலின் தக்லைப் என தலைப்பிடப்பட்டிருக்கிற KH234 அதை மணிரத்தினம் இயக்குகிறார். படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கமலஹாசனின் நாயகனே நினைவூட்டியது. ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் என முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

விக்ரம் 2: 2022 வெளியான விக்ரம் மூவியில் கமல் அதிரடி ஆக்ஷனில் தெறிக்க விட்டிருந்து வசூலிலும் நல்ல முன்னேற்றத்தையே கண்டது. அதே லோகேஷ் கனகராஜ் சூர்யா மற்றும் கமலின் கூட்டணி விக்ரம் 2விற்காக இணைய உள்ளனர். இப்படம் 2025 நவம்பரில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

KH237: 2025 ஆண்டு ஆக்சனை மையமாக வைத்து துவங்க உள்ள கமலின் KH237 படத்தை அன்பவ்றிவு சகோதரர்கள்  இயக்க உள்ளனர். கபாலி, விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு ஸ்டாண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர் இச்சகோதரர்கள். கேஜிஎப் படத்திற்காக  இச்சகோதரர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also read: அப்ப 150 கோடி வடையெல்லாம் கப்ஸாவா.. பிக்பாஸுக்காக கமல் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இதுதான்

- Advertisement -spot_img

Trending News