வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 பேருக்கு எப்பொழுதுமே சிபாரிசு செய்யும் கமல்.. உலகநாயகன் படத்தை பெரும்பாலும் மிஸ் செய்யாத நடிகர்கள்

உலகநாயகன் கமலஹாசன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். இவருக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் என ஏகப்பட்டவர்கள் உண்டு. இதில் சிலருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பளிப்பார். குறிப்பிட்ட சிலர் இல்லாத கமலின் படங்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் தன்னுடைய படங்களின் மூலம் நிறைய கலைஞர்களை வாழவைத்தும் கொண்டிருக்கிறார்.

நாசர்: 1987 ஆம் ஆண்டு கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படத்திலிருந்து தொடங்கிய கமல்-நாசரின் நட்பு இன்றும் தொடர்கிறது. அதன் பின்னர் மகளிர் மட்டும், உன்னால் முடியும் தம்பி, சத்யா, மகளிர்க்காக, நாயகன், அவ்வை சண்முகி , அபூர்வ சகோதர்கள், ஆளவந்தான், அன்பே சிவம், ஹேராம், உத்தம வில்லன் போன்ற நிறைய கமல் படங்களில் நாசர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: சக நடிகர்களை தூக்கிவிட்டு அழகு பார்க்கும் கமல்.. கலைஞர்களை வளர விட மாட்டார் என பேசியது பச்ச பொய்

நாகேஷ்: கோலிவுட் காமெடி உலகின் கிங் நாகேஷ் தன்னுடைய வாழ்நாளில் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். நாகேஷ்க்கு முதன் முதலில் நெகடிவ் கேரக்டர் கொடுத்தது கமல் தான். இவர் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷ் வில்லனாக நடித்திருந்தார். அதன்பின்னர் காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா MBBS, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்தார்.

டெல்லி கணேஷ்: நாடக கலைஞராக இருந்த டெல்லி கணேஷை சினிமாவிற்கு கொண்டு வந்தது கமலின் குருவான இயக்குனர் கே பாலசந்தர். அதன் பின்னர் கமல் டெல்லி கணேஷுக்கு மைக்கேல் மதன காமராஜன், நாயகன், தெனாலி, அவ்வை சண்முகி, அபூர்வ சகோதர்கள், காதலா காதலா, ஹேராம் போன்ற படங்களில் நல்ல கேரக்டர்களை கொடுத்தார்.

Also Read: துணிவு ஜெயிக்கலனா உன் கேரியர் கிளோஸ்.. கமல் போட்ட கண்டிஷனால் பதறிப்போன வினோத்

சந்தான பாரதி: கமலின் மிக முக்கிய படங்களான குணா மற்றும் மகாநதி படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதி. மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், அன்பே சிவம், தசாவதாரம், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் காமெடி ரோல்களில் சந்தான பாரதியை கமல் நடிக்க வைத்திருக்கிறார். சமீபத்திய ரிலீசான விக்ரம் படத்தில் கூட இவர் நடித்திருப்பார்.

ஜனகராஜ்: தன்னுடைய குருநாதரான கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி வைத்த நடிகர் ஜனகராஜுக்கு கமல் தன்னுடைய படங்களில் நிறைய வாய்ப்புகளை கொடுத்தார். நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு சமமான கேரக்டரில் ஜனகராஜ் நடித்திருப்பார். அதைப்போன்று அபூர்வ சகோதர்கள், உன்னால் முடியும் தம்பி, தசாவதாரம் போன்ற ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

Also Read: கமல் தனக்கே உரிய காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. எப்போதுமே ரசிக்கும்படி செய்த தெனாலி

Trending News