ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கிராமத்து மண் வாசனையுடன் கார்த்தி ஜெயித்த 5 படங்கள்.. குடும்பங்கள் கொண்டாடிய கடைக்குட்டி சிங்கம்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அதற்கு முன்பாகவே வெளிநாட்டில் படித்தவர் இவர். ஆனால் கொஞ்சம் கூட அந்த சாயல் எதுவுமே இல்லாமல் தன்னுடைய முதல் படத்திலேயே பக்கா கிராமத்து இளைஞனாக நடித்து வெற்றி பெற்றார். கார்த்தி பல படங்களின் நடித்து வெற்றி பெற்றாலும் கிராமத்து கதைகள் என்று வந்துவிட்டால் அவருக்கென்று தனியான வரவேற்புகள் அதிகமாகவே உண்டு.

பருத்திவீரன்: இயக்குனர் அமீர் மூலம் பருத்திவீரன் ஆக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கார்த்தி. தென்மாவட்ட பேச்சு வழக்காக இருக்கட்டும், வீரமாக இருக்கட்டும், அதே நேரத்தில் நக்கலுடன் பேசும் தோணியாக இருக்கட்டும், கார்த்தி மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண இளைஞனை போலவே இந்த படத்தில் வாழ்ந்து காட்டினார்.

Also Read:அசர வைக்கும் வந்திய தேவனின் சொத்து மதிப்பு.. 25 படங்களில் இவ்வளவு கோடியா?

கொம்பன்: தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ உறவுகளைப் பற்றி பெருமை பேசி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் முதன் முதலில் மாமனார் மற்றும் மருமகனுக்கிடையேுள்ள உறவைப் பற்றிய ஆழமாக பேசிய திரைப்படம் தான் கொம்பன். இந்த படத்தில் வீரம் நிறைந்த இளைஞனாகவும், அதே நேரத்தில் உணர்வுகளையும் ஒன்றாக கண் முன் கொண்டு வந்து காட்டியிருப்பார் கார்த்தி.

கடைக்குட்டி சிங்கம்: தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு குடும்பப் பின்னணியில் வந்த திரைப்படம் என்றால் அது கடைக்குட்டி சிங்கம். அக்கா, தங்கைகளுடன் பிறக்கும் ஒரு சகோதரனின் எதார்த்தமான வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Also Read:சிங்கத்தோடு போட்டி போடும் சிறுத்தை.. வீம்போடு எதிர்க்கத் துணியும் கார்த்தி

விருமன்: கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி இயக்குனர் முத்தையாவுடன் மீண்டும் இணைந்த திரைப்படம் தான் விருமன். இந்த படம் தந்தை மகனுக்கும் இடையிலான உறவைப் பற்றி பேசிய திரைப்படம். இதுவும் முழுக்க முழுக்க மதுரை மண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. மேலும் கார்த்தியின் படங்கள் என்றாலே அது தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை நிரூபித்த திரைப்படம் இது.

கைதி: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதை களத்துடன் உருவான திரைப்படம் கைதி. இந்த படம் பெரும்பாலும் ஜெயிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் கார்த்தி பிரியாணி சாப்பிடுவது போல் வரும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் பிரபலமான ஒன்று.

Also Read:தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கிய கார்த்தி.. 2 மாஸ் ஹீரோக்களிடமிருந்து கல்லாவை காப்பாற்ற எடுத்த முடிவு

Trending News