நடிகர் சிவகுமாரின் இளைய வாரிசான கார்த்தி அமெரிக்கா சென்று படித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். அதன்படி மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சில காலம் பணிபுரிந்தார். ஆனால் கார்த்தியை ஹீரோவாக்கியது அமீரின் பருத்திவீரன் படம்.
முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சூர்யா சினிமாவில் பல வருடமாக கஷ்டப்பட்டு ஒரு நிலையான இடத்தை பிடித்த நிலையில் முதல் படத்திலேயே கார்த்தி அடித்து தூக்கி விட்டார். அதன் பிறகு நடுவில் சறுக்கல் வந்தாலும் சுதாகரித்துக் கொண்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Also Read : 3வது முறையாக போட்டி போடும் சிவகார்த்திகேயன், கார்த்தி.. தீபாவளி ரிலீசுக்கு சரவெடியாக வரப்போகும் படங்கள்
அந்த வகையில் கார்த்தியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது கைதி. இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்நிலையில் தனது குரு மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியதேவனாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் எக்கச்சக்க பெண் ரசிகர்களை கார்த்தி பெற்றுள்ளார். இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடும் கார்த்தியின் சொத்து மதிப்பை பார்க்கலாம். அதாவது கார்த்தி சினிமாவில் கால் பதித்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இப்போது தான் 25வது படத்தைத் தொட்டுள்ளார்.
Also Read : சிங்கத்தோடு போட்டி போடும் சிறுத்தை.. வீம்போடு எதிர்க்கத் துணியும் கார்த்தி
அதன்படி கார்த்தி தற்சமயம் ஒரு படத்திற்கு 8 இருந்து 10 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். மேலும் இந்திய ரூபாயில் கார்த்திக்கு 97 கோடி சொத்து மதிப்பு உள்ளது. சென்னை தியாகராய நகரில் 30 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு உள்ளது. இது தவிர பல இடங்களில் பிளாட் வாங்கி உள்ளார்.
மேலும் விலை உயர்ந்த கார்களும் கார்த்தி வைத்துள்ளார். அதன்படி ஆடி மற்றும் Mercedes Benz ML350 போன்ற கார்களை வைத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான் படம் வெளியாக இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் பட வெற்றியைத் கார்த்திக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆகையால் இன்னும் குறுகிய காலத்திலேயே பல கோடி சம்பாதிக்க இருக்கிறார் கார்த்தி.
Also Read : தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கிய கார்த்தி.. 2 மாஸ் ஹீரோக்களிடமிருந்து கல்லாவை காப்பாற்ற எடுத்த முடிவு