வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

35 வருட சினிமா வாழ்க்கையில் மாரிமுத்து சொத்து மதிப்பு.. குணசேகரனுக்கு வாரி வழங்கிய சன் டிவி

Actor Marimuthu: சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய இயக்குனர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 35 வருடம் சினிமாவில் மாரிமுத்து பயணித்து வந்தாலும், சன் டிவியில் கடந்த ஒரு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரம் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

வில்லத்தனத்துடன் கூடிய நகைச்சுவை தோரணை ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. மேலும் சிலரின் எதிர்பாராத இழப்பு மீளா துயரில் ஆழ்த்தும். இந்த வகையில் தான் மாரிமுத்து இறப்புச் செய்தி மக்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. இந்த சூழலில் மாரிமுத்துவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது வெளியாகி வருகிறது.

Also Read : குணசேகரனை விட குடைச்சல் கொடுக்கும் கரிகாலன்.. இனி மாரிமுத்துவை பார்க்க முடியாத கடைசி எபிசோடு

இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது மாரிமுத்து ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அவரது சம்பளம் 1500 ரூபாயாக இருந்திருக்கிறது. அதன் பிறகு பல கஷ்டங்கள் தாண்டி படிப்படியாக முன்னேறி வந்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் இயக்குனராக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதைத்தொடர்ந்து தான் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

Also Read : மாரிமுத்துவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் சூர்யா.. புல்லரிக்க வைக்கும் விஸ்வாசம்

அதன்படி ஆரம்பத்தில் எதிர்நீச்சல் தொடரில் நடிக்க கிட்டத்தட்ட 20,000 ஒரு நாளைக்கு சம்பளமாக பெற்றிருக்கிறார். அதன் பிறகு இத்தொடரின் அச்சாணியாக இருந்த இவருக்கு சம்பளம் உயர்த்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மாரிமுத்து சம்பளம் வாங்கி இருக்கிறார்.

இவருடைய கதாபாத்திரத்தின் மவுஸ் கூடி இருந்ததால் சன் டிவி பணத்தை வாரி வழங்கி இருக்கிறது. அதோடுமட்டுமின்றி சமீபத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான கனவு வீடு ஒன்றைக் கட்டி இருக்கிறார். மேலும் சொந்தமாக காரும் வைத்திருக்கிறார். தோராயமாக பார்த்தால் மாரிமுத்துவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read : இயக்குனராக ஜெயிக்க முடியாமல் போன மாரிமுத்து.. எடுத்த மூன்று படங்களில் தோல்வியை கண்ட 2 படம்

Trending News