உலகநாயகன் கமலஹாசனுக்கும், நடிகர் நாசருக்கும் சினிமா என்பதையும் தாண்டி ஒரு இணக்கமான நட்பு உண்டு. கமலஹாசனின் பெரும்பாலான படங்களில் கண்டிப்பாக நடிகர் நாசர் இருப்பார். இதில் ஒரு சில படங்களில் நடிகர் கமலஹாசனையே மறந்து நாசரை பார்க்கும் அளவுக்கு நடிப்பில்நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.
குருதிப்புனல்: 1995 ஆம் ஆண்டு பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் கமலஹாசன், கௌதமி, அர்ஜுன் ஆகியோர் நடித்த திரைப்படம் தான் குருதிப்புனல். இந்த படத்தில் நாசர் பத்ரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கமலஹாசன் காவல்துறை அதிகாரியாகவும், நாசர் தீவிரவாத குழுவின் தலைவனாகவும் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். குருதிப்புனல் பத்ரியின் வில்லத்தனம் ஹீரோ கமலையே மறக்க செய்திருக்கும்.
Also Read: கமலை காட்டிலும் ரஜினி எவ்வளவோ மேல்.. மேடையில் கிழித்து தொங்க விட்ட பிரபலம்
தேவர்மகன்: 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமலஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம் தான் தேவர் மகன். தேவர் மகன் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவில் இருக்கும் வரை நாசர் ஏற்று நடித்த மாயாண்டி தேவர் கதாபாத்திரமும் நினைவில் நிற்கும். ஒரு பக்கம் கமலஹாசன், மறுபக்கம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவர்கள் இருவரையும் தாண்டி நாசரின் நடிப்பு பார்ப்பவர்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
அவ்வை சண்முகி: உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான வெற்றி படங்களில் அவ்வை சண்முகியும் உண்டு. கமலஹாசன், ஜெமினி கணேசன், மீனா ஆகியோர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. இதில் பாட்ஷா பாயாக நடித்த நாசர் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார். அதிலும் அவர் பேசும் சென்னை வட்டார பேச்சு நல்ல வரவேற்பு பெற்றது.
Also Read: அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே
அன்பே சிவம்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், ஆர் மாதவன், கிரண் ஆகியோர் நடித்து 2003 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் அன்பே சிவம். இந்த படத்தில் நாசர் கதாநாயகியின் தந்தையாக கந்தசாமி படையாட்சி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் நாசர் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருப்பார்.
உத்தமவில்லன்: இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர், எம் எஸ் பாஸ்கர், நாசர் ஆகியோர் நடித்த திரைப்படம் உத்தம வில்லன். இந்த படத்தில் நாசர், ஊர்வசி, கமலஹாசன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் ஆகியோருக்குள் ஒரு பெரிய நடிப்பு போட்டியையே பார்க்கலாம். ஒவ்வொரு காட்சிகளிலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தங்கள் நடிப்பு திறமையை காட்டி இருப்பார்கள்.
Also Read: குருவிடம் சம்பளத்திற்காக மல்லுக்கட்டிய கமல்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்