வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எல்லாத்தையும் இழந்த பின், புத்தியோடு முடிவெடுத்த டாப் ஸ்டார்.. பிரசாந்துக்கு கடைசியா கை கொடுக்கும் வாரிசு நடிகர்

Actor Prashanth: எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வெற்றி கண்டவர் தான் நடிகர் பிரசாந்த். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கமல் மற்றும் ரஜினிக்கு பிறகு அடுத்த தலைமுறையில் இவர் தான் அதிக ஹிட் படங்களை கொடுத்து, ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தார். இவருடன் படம் பண்ண இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி காத்திருந்தனர்.

நடிகர் அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருக்கும் பொழுதே, பிரசாந்த் முன்னிலையில் இருந்தார். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தார்கள். ஹீரோயின்களும் இவருடன் நடிப்பதற்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். தமிழ் சினிமாவின் மொத்த அதிர்ஷ்டமும் பிரசாந்த் கையில் தான் இருந்தது என்று கூட சொல்லலாம்.

Also Read:500 படங்களில் சம்பாதித்ததை ஒரு படம் தயாரித்த பாக்யராஜ் பட நடிகர்.. வறுமையில் இறந்து போன கொடுமை

புகழின் உச்சியில் இருந்த பிரசாந்தின் சினிமா வாழ்க்கை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அதிலும் அவருடைய திருமணத்திற்கு பிறகு, மொத்தமாகவே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். பிரசாந்தின் தோல்விக்கு ஒட்டுமொத்த காரணமே அவருக்கு இருந்த ஈகோ தான். அதை மட்டும் விட்டிருந்தால் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்த நிறைய பேர், வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன், காமெடியன் என தங்களுடைய பாதைகளை மாற்றிக் கொண்டு சினிமாவில் நீடித்து இருக்கிறார்கள். ஆனால் பிரசாந்த் மட்டும் நடித்தால் ஹீரோ தான் என மொத்தமாக கோட்டை விட்டுவிட்டார்.

Also Read:மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

மொத்தமும் இழந்த பிறகு தான் இப்போது பிரசாந்துக்கு புத்தி வந்திருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி நடிக்க இருக்கும் படத்தில் அவரும் இணைந்து இருக்கிறார். தளபதி 68 இல் நடித்த பிறகு, கண்டிப்பாக பிரசாந்திற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரலாம். அவருடைய நடிப்பின் இன்னொரு கோணத்தை பார்க்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.

உண்மையிலேயே தளபதி 68 படத்தில் இருந்து தான், பிரசாந்த் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார். விஜய் படத்தில் நடித்த பிறகு ஆவது அவருடைய சினிமா வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கலாம். இந்த முடிவை முன்னரே எடுத்து இருந்தால் இப்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக இருந்திருப்பார்.

Also Read:ஜெயிலர் வசூலை லியோவால் முறியடிக்க முடியாது.. மீசையை எடுத்துறேன் என அக்ரிமெண்ட் போட்ட நடிகர்

Trending News