திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமீபத்தில் சந்தானம் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிரிப்பே வரவழைக்காத காமெடி மூவிஸ்

ஒரு காலத்தில் கோலிவுட் திரையுலகத்தின் காமெடி கிங்காக இருந்தவர் சந்தானம். இவரை அடுத்த கவுண்டமணி என்று கூட சொல்லி கொண்டனர். ஆனால் இவர் திடீரென ஹீரோ ஆகும் ஆசையில் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார். சமீபத்தில் இவர் நடித்த எந்த படங்களும் சொல்லி கொள்ளும் அளவிற்கு பேர் வாங்கவில்லை. இவரிடம் இப்போது காமெடிக்கும் பஞ்சம் வந்துவிட்டது.

ஏஜென்ட் கண்ணாயிரம்: ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படம் ஏற்கனவே அப்படியே தமிழில் டப்பிங்கில் வெளிவந்து இருக்க, தேவையில்லாத ஆணியாக சந்தானம் தமிழ் ரீமேக் வேறு செய்திருக்கிறார். கடைசியில் படம் படு தோல்வியையே சந்தித்தது.

Also Read: யாருக்கும் அடிபணியாத சந்தானம்.. அஜித் பெயரை கேட்டு 8 வருடத்திற்கு பின் சரண்டர்

குலு குலு: உண்மையாகவே இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு காரணம் யூடியூப் பிரபலங்களை இந்த படங்களில் நடிக்க வைத்தது தான். ஆனால் சந்தானம் வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். முழு நீள காமெடி படத்தில் எந்த காட்சியிலுமே சிரிப்பு வரவில்லை என்பதே இந்த படத்தின் தோல்விக்கு காரணம்.

பாரிஸ் ஜெயராஜ்: சந்தானம், அனைகா சோதி, பிரித்விராஜ், மொட்டை ராசேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இயக்குனர் ஜான்சன் இயக்கிய இந்த படமும் சந்தானத்திற்கு தோல்வி படமாகவே அமைந்தது.

Also Read: ஹீரோயிசத்தை கைவிட்ட சந்தானம்.. மாஸ் ஹீரோ படத்தில் மீண்டும் காமெடி ரோல்

பிஸ்கோத்: சந்தானம், சௌகார் ஜானகி, ஆனந்த் ராஜ், ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பிஸ்கோத். இந்த படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். பிஸ்கோத் தயாரிக்கும் நிறுவனத்தை மையமாக கொண்டது தான் இந்த படம். பிஸ்கோத் படம் ரசிகர்களிடையே எடுபடாமல் போனது.

சபாபதி: சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே, வம்சி கிருஷ்ணா, மயில்சாமி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் சபாபதி. மேலும் மதுரை முத்து, புகழ், லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இருந்தாலும் இந்த படம் தோல்வியடைந்தது.

Also Read: சந்தானம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 5 நடிகர்கள்.. லொள்ளு சபாவில் இருந்து தொடரும் நட்பு

Trending News