ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பழைய இயக்குனருடன் புதிதாய் கைகோர்க்கும் சிம்பு.. 50வது படத்திற்கு நம்பிக்கை இல்லாமல் எடுத்த முடிவு

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

இதையடுத்து சிம்புவின் நடிப்பில் பத்து தல என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இது அவருக்கு 48 வது திரைப்படமாகும். அதைத்தொடர்ந்து சிம்பு கொரோனா குமார் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவரின் 50 வது திரைப்படம் குறித்த தகவல் என்ன என்பதை காண பலரும் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

ஒவ்வொரு நடிகருக்கும் 50 வது திரைப்படம் என்பது மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அந்தப் படத்தின் இயக்குனரில் ஆரம்பித்து ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். அப்படி இந்த படத்திற்காக சிம்பு தேர்ந்தெடுத்திருக்கும் அந்த பிரபல இயக்குனர் தான் ராம்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்று அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் இவர் தற்போது சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் சிம்புவின் 50 வது படத்தை அவரே கதை எழுதி, இயக்க போகிறார் என்ற ஒரு தகவலையும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என்று தெரியாமல் சிம்புவின் ரசிகர்கள் அதிக குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் கூடிய விரைவில் சிம்பு தரப்பிலிருந்து அவருடைய 50வது திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்த படத்தை சிம்புவே இயக்கும் பட்சத்தில் அவருடைய ரசிகர்களுக்கு நிச்சயம் இது டபுள் ட்ரீட்டாக இருக்கும்

Trending News