வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பட்ட நாமம் போட்ட கமல், ஆறுதல் பரிசாக கிடைத்த தக் லைஃப்.. அதிரடி முடிவெடுத்த சிம்பு!

SIMBU: சில நேரங்களில் சினிமாவில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என சரியாக தெரியாது. அப்படி ஒரு இக்கட்டான சூழலில் தான் நடிகர் சிம்பு மாட்டிக் கொண்டிருக்கிறார். சிம்பு நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதற்கு இருக்கும் படத்தை கமல் தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

அதன் பின்னர் அந்த படத்தை பற்றி வேறு எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்த படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைக்கிறார், தலைமுடியை வளர்க்கிறார் என அவ்வப்போது செய்திகள் வெளியானதே தவிர இந்த படம் என்ன ஆனது என சொல்ல ஆள் இல்லை.

அதிரடி முடிவெடுத்த சிம்பு!

அதே நேரத்தில் கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது என்ன ஒன்னுக்கு ஒன்னு சம்பந்தம் இல்லாமல் இருக்கு, அப்போ தேசிங்கு பெரியசாமி இயக்கம் படம் என்ன ஆச்சு என நிறைய பேருக்கு சந்தேகம் வந்திருக்கும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அடுத்து ஒரு படத்தை வெளியிட முடியாமல் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தான் இழப்பு என்று சொல்ல வேண்டும்.

STR 48 என தலைப்பிடப்பட்ட இந்தப் படம் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. அதன் பின்னர் சமீபத்தில் இந்த படத்தை கமல் தயாரிக்க இருப்பது இல்லை, தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கிடையில் தற்போது இந்த படத்தின் உண்மை நிலவரம் தெரிய வந்திருக்கிறது. கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தால் இந்த படத்தை தயாரிக்க முடியாது என சிம்பு தரப்பிடம் சொல்லி இருக்கிறார்.

மேலும் சிம்புவின் மனம் புண்படாமல் இருக்க கிடைத்த வாய்ப்பு தான் தக் லைஃப். கமலஹாசன் இந்த படத்தை கைவிட்டு விட்டாலும் சிம்புவுக்கு கதை ரொம்பவும் பிடித்து போய்விட்டது. இதனால் இந்த படத்தை தானே தயாரிக்க முன் வந்திருக்கிறார். மேலும் இந்த படம் சிம்புவின் 50 ஆவது படமாக ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Trending News