செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தளபதியுடன் போட்டி போட்டு தோற்ற சிம்பு.. இதுக்குதான் அப்பவே வேணான்னு சொன்னாங்க

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்து இருக்கிறது.

மாநாடு வெற்றிக்கு பிறகு ரிலீஸ் ஆன படம் இது. இந்த படம் தமிழகம் முழுவதும் பாசிட்டிவ் ரிவியூக்களை மட்டுமே பெற்று வருகிறது. மேலும் மாநாடு படத்தின் வசூலை இந்த படம் பீட் செய்து விட்டது. இந்த படத்தின் ஒரு நாள் வசூல் மட்டுமே இந்திய அளவில் 7.4 கோடியாம்.

Also Read: வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையாடா திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்துக்காக மட்டும் சிம்பு கிட்டத்தட்ட 20 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார். இசைப்புயல் AR ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் தன்னுடைய திரைப்பயணத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அந்த இன்டர்வியூவின் போது சிம்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த போடா போடி படத்தை பற்றியும் பேசியிருக்கிறார்.

Also Read: சிம்புவை போல் வம்பில் சிக்கிய நடிகர்.. அடுத்தடுத்த புகாரால் வந்த அவப்பெயர்

போடா போடி படத்தில், தான் மிக நுணுக்கமாக நடித்ததாகவும், ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களை கூட மிக எதார்த்தமாக சரியான நேரம் எடுத்து பேசியதாகவும், அந்த சீனுக்கு ஏற்ற ரியாக்சன்களை பக்காவாக கொடுத்ததாகவும், சாதாரண நடிகர்களால் இதை செய்து விட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

போடா போடி விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து வரலக்ஷ்மி, VTV கணேஷ், ஷோபனா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்துடன் ரிலீஸ் ஆனதால் அப்போது அவ்வளவாக எடுபடவில்லை.

Also Read: மாநாடு வசூலை முறியடித்த வெந்து தணிந்தது காடு.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

Trending News