Sivakarthikeyan: அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது என்று சொல்வாங்க. அப்படி ஒரு விஷயம் சிவகார்த்திகேயனுக்கு நடந்து விடக்கூடாது என்பதில் தான் ரொம்ப உஷாராக இருக்கிறார். சிவகார்த்திகேயன் தொடர்ந்து நல்ல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் அவருடைய சினிமா கேரியர் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருந்தது.
ஒரு படம் ஹிட்டாகி விட்டால் உச்சாணி கொம்புக்கு போய்விடுவார். அடுத்த படமே தோல்வி அடைந்து விட்டால் அவ்வளவுதான் இனி சிவகார்த்திகேயன் என முடித்து விடுவார்கள். ஆனால் சமீபத்தில் ரிலீஸ் ஆன அமரன் படம் சிவகார்த்திகேயனை வேறொரு பரிணாமத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது.
மரண பயத்தை காட்டிட்டான் பரமா!
அமரன் படம் இதுவரை 300 கோடி வசூல் செய்திருக்கிறது. இது குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயனின் இந்த 300 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் அவர் போட்டிருக்கும் பேஸ்.
இனிதான் அவர் அதன் மூலம் வளர்ந்து வர வேண்டும். சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து ரிலீஸ் ஆக இருக்கும் படம் இந்த 300 கோடியை தாண்டி வசூல் செய்து விட வேண்டும். இல்லை என்றால் 300 கோடி வசூல் என்பது அமரன் படத்திற்காகத்தானே தவிர சிவகார்த்திகேயனின் வசூல் கிடையாது என்று சொல்லிவிடுவார்கள்.
இதுவே அடுத்த படமும் 300 கோடி வசூலை தாண்டி விட்டாள் சிவகார்த்திகேயன் டாப் லிஸ்ட், ஹீரோ இனி அவரை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு போடலாம். வசூலை வாரி குவித்து விடுவார் என்ற பிம்பம் தோன்றும். இதனால் அமரனுக்கு பிறகான சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்று.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் துப்பாக்கி மாதிரி அமைந்து விட்டால் தனஞ்செயன் சொன்ன மாதிரி சிவகார்த்திகேயனின் சினிமா கேரியர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். இதில் கொஞ்சம் பிசிரு தட்டி விட்டாலும் சிவகார்த்திகேயன் எப்போ கீழே விழுவார் என காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாகிவிடும்.