Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தடாலடியாக நம்பர் 1 இடத்தை பிடிக்க ஆசை படும் பராசக்தி ஹீரோ.. மாட்டிகிட்டு முழிக்கும் தயாரிப்பாளர்கள்!

தடாலடியாக நம்பர் 1 இடத்தை பிடிக்க ஆசை படும் பராசக்தி ஹீரோ.. மாட்டிகிட்டு முழிக்கும் தயாரிப்பாளர்கள்!

Sivakarthikeyan: ஆக்க பொருத்தவனுக்கு ஆற பொருக்காது என்று சொல்வார்கள் அப்படித்தான் சிவகார்த்திகேயனின் திட்டமும் இருக்கிறது. அமரன் படத்தின் மூலம் யாரும் தொட முடியாத உச்சத்தை தொட்டார். அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் பராசக்தி மற்றும் மதராசி படங்கள் அவரை கண்டிப்பாக […]

Sivakarthikeyan: ஆக்க பொருத்தவனுக்கு ஆற பொருக்காது என்று சொல்வார்கள் அப்படித்தான் சிவகார்த்திகேயனின் திட்டமும் இருக்கிறது. அமரன் படத்தின் மூலம் யாரும் தொட முடியாத உச்சத்தை தொட்டார்.

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் பராசக்தி மற்றும் மதராசி படங்கள் அவரை கண்டிப்பாக மற்றும் ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாட்டிகிட்டு முழிக்கும் தயாரிப்பாளர்கள்!

ரஜினி, கமல் மற்றும் அஜித் இந்த போட்டி எல்லாம் தாண்டி வேறொரு இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து முதல் இடத்திற்கு வர வேண்டும் என்றால் இப்போதைய கணக்குக்கு சிவகார்த்திகேயன் முயற்சி பண்ணினால் முடியும்.

அதற்கு அவரது அடுத்தடுத்த படங்களும் கண்டிப்பாக உதவி புரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் எடுத்தவுடன் நம்பர் ஒன் இடத்திற்கு வந்து விட வேண்டும் என சிவகார்த்திகேயன் தற்போது புதிய முடிவை எடுத்திருக்கிறார்.

படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது என்பதுதான். விஜய், அஜித் போன்றவர்களே இப்போதுதான் 100 கோடி சம்பளம் என்ற கட்டத்திற்கு நகர்ந்து வந்தார்கள்.

அப்படி இருக்கும் போது குறிப்பிட்ட காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் இப்படி ஒரு முடிவு எடுப்பது அவருடைய சினிமா பாதைக்கு சருக்களாக கூட அமையும். தயாரிப்பாளர்களுக்கு எந்த அளவுக்கு தோழமையாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு தான் ஹீரோக்களால் முன்னேற முடியும்.

சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்தால் வெற்றி தான் என்ற காரணத்தினால் இப்போதைக்கு தயாரிப்பாளர்களும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இவர் எடுத்த முடிவால் தற்போது லோ பட்ஜெட் படங்களை இயக்கும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலி ஏற்பட்டிருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.