Sivakarthikeyan SK 21 look: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ரிலீசான மாவீரன் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது. அவர் சந்தித்த பிரின்ஸ் படத்தின் படுதோல்வியை, இந்த படத்தின் மூலம் சமன் செய்து விட்டார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து அயலான் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் சிவா தற்போது அவருடைய 21 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி சிவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
Also Read:நிராசையாக போன சிவகார்த்திகேயன், தனுஷ் ஆசை.. என்னதான் முட்டி மோதினாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை கதையில் தான் சிவா நடிக்க இருக்கிறார். SK 21 படத்தின் அப்டேட் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்திற்காக சிவா தான் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைலை வெளியில் காட்டாமல் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கினார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த லுக் தான் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் போட்டோ

ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயன் முதன் முதலில் சிக்ஸ் பேக் இந்த படத்தில் வைத்திருக்கிறார். இருந்தாலும் சிக்ஸ் பேக் என்பதெல்லாம் முதலில் வெளியில் சொல்லிக் கொள்ள பில்டப் ஆக இருந்தாலும், அதன் பின்னர் அவ்வளவாக எடுபடாது என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.காமெடியில், எதார்த்தமான திரைகளங்களில் வெற்றி கண்ட சிவகார்த்திகேயன் முதன் முதலாக அதிரடி ஆக்ஷனில் இந்த படத்தின் மூலம் இறங்குகிறார்.
இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் அப்டேட் கூட ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய பட அப்டேட் மூலம் லியோ படத்துடன் மோதுவது இணையத்தை கண்டிப்பாக அந்த நாளில் புரட்டிப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படம் பேக் எனவும், ரசிகர்களால் பரப்பப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
Also Read:சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் போட்ட ரஜினி.. ஜெயிலர் பிரமோஷனுக்காக இப்படி ஒரு உருட்டா!