வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவை ஓவர் டேக் செய்து விஜய் இடத்தை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. கைவசம் இருக்கும் தரமான 6 படங்கள்

Sivakarthikeyan: சின்ன வயசில் முயல், ஆமை கதை கேட்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. பொதுவாக சிவகார்த்திகேயனின் பட தேர்வுகள் குடும்பம் மற்றும் குழந்தைகளை கவர்வதாக தான் இருக்கும். மாஸ், கிளாஸ் இதெல்லாம் முயற்சி செய்து பார்க்க மாட்டார்.

இருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக இருப்பதால் சிவகார்த்திகேயனுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. சூர்யா மாஸ் ஹீரோ லிஸ்டில் இருப்பவர். ஆனால் கடந்த சமீப காலமாக சூர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.

கங்குவா வழக்கமான பிரம்மாண்ட படங்களின் லிஸ்டில் சேர்ந்து விடும். மீண்டும் தன்னை ஒரு ஆதர்ஷ நாயகனாக சூர்யா நிருபிப்பதற்கு சுதா கொங்கராவின் படம் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூர்யா தன்னுடைய நிலைமை புரிந்து கொள்ளாமல் அந்த வாய்ப்பை அசால்டாக தவற விட்டு விட்டார். இதனால் தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு இருக்கும் பெரிய இடைவெளியை நிரப்புவதற்கான படங்களின் லிஸ்ட்டோடு சிவகார்த்திகேயன் காத்திருக்கிறார். அவர் கைவசம் இருக்கும் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

அமரன்: மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகி இருக்கிறது அமரன் படம். இதனால் இந்த படத்தின் வெற்றி ரிலீஸ்க்கு முன்பே உறுதியாகிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமரன் தீபாவளி ரிலீஸ் ஆக அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து இருக்கிறது.

SK23: ரஜினியை வைத்து தர்பார் படம் இயக்கிய பிறகு முருகதாஸ் இணைந்திருக்கும் தமிழ் ஹீரோ சிவகார்த்திகேயன் தான். இந்த படம் விஜய்க்கு சொல்லப்பட்ட கதை. படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லட்சுமி மூவிஸ் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் நடிக்கிறார்.

SK 24: டான் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தன்னுடைய 24 ஆவது படத்தில் இணைகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ரிலீசுக்கு பிளான் பண்ணப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

SK 25: சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 ஆவது படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். இந்த படம் அரசியல் கதையை மையமாகக் கொண்டது என சொல்லப்படுகிறது. GOAT படத்தின் ரிலீஸுக்கு பிறகு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

SK 26: இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா உடன் தன்னுடைய 26 ஆவது படத்தில் சிவா இணைகிறார். சூர்யா நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு படத்தின் கதையில் தான் எஸ் கே நடிக்க இருக்கிறார். அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு இந்த படமும் தரமான படமாக அமையும்.

முரண்டு பிடித்த சூர்யா

Trending News