செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மனம் மாறிய சூர்யா.. சண்டைக்கு பின் சமாதானக் கொடியோடு விட்ட தூது

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் 10 நிமிடங்கள் கேமியோ ரோலில் நடித்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் விக்ரம் படத்தில் உடன் நடித்த உலக நாயகன் கமலிடம் கூட அதற்காக ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக பெற்றார்.

சூர்யாவிற்கு ஜெய்பீம் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு  படம் ஓடவில்லை. அவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் படம் பிளாப் வரிசையில் சேர்ந்தது. இதனால் விக்ரம் படத்திற்கு பிறகு  சூர்யாவின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில்  ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய ஆறு, வேல், சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த மாதம் 1-ம் தேதி திரைக்கு வந்த யானை படம் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. சூர்யாவிற்கு கூறிய கதையில்தான் இப்பொழுது அருண் விஜய் நடித்துள்ளார்.

ஏற்கனவே சூரரை போற்று படம் OTT- வெளியிட்டதை எதிர்த்து பேசிய ஹரிக்கும் சூர்யாவிற்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் சூர்யா, ஹரி மீது மனக்கசப்பில் இருந்ததாக தெரிகிறது. அதையெல்லாம் இப்பொழுது சூர்யா மறந்து ஹரி இயக்கத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதாக சமாதான கொடியோடு அழைப்பு விடுத்திருக்கிறாம்.

இதனால் சூர்யா மாஸ் ஹீரோவாக உருவெடுத்தது முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மீண்டும் ஆறாவது முறையாக அருவா படத்தில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தைக் குறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் ஹரி-சூர்யா இடையே ஆன மோதலால் திடீரென்று அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு மீண்டும் இவர்களுக்கிடையே சமாதானம் ஏற்பட்டதால், அருவா திரைப்படம் துளிர்விட போகிறது. இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சூர்யா 41, வாடிவாசல் படத்திற்கு பிறகு அருவா படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இணைய உள்ளார்.

Trending News