உதடு வலிக்க முத்தம், முட்டி தேய டான்ஸ் ஆடிட்டு நேரடியா CM.. விஜய்யை விளாசிய லியோ பிரபலம்

Actor Vijay criticized by Leo movie actor: சினிமாவில் மட்டுமல்ல இப்போது அரசியலையும் ஆட்டம் காண வைக்க போவதற்கு அத்தனை வேலையும் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவர் இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு அடுத்ததாக முழுநேர அரசியல்வாதியாக போகிறார். இதற்காகவே சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் துவங்கி, அதில் 2 கோடி உறுப்பினர்களை இணைக்கும் பணிகளை துவங்கி உள்ளார்.

இவர் 2026ம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் காண போகிறார். இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தில் ‘கான்’ என்ற கேரக்டரில் நடித்த முரட்டு வில்லன் மன்சூர் அலிகான் விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசி இருக்கிறார்.

இவர் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி, அந்தக் கட்சிக் கூட்டத்தில் சில விஷயங்களை கூறினார். ‘சினிமாவில் உதடு வலிக்க முத்தம் கொடுத்துட்டு, மற்ற மாநில நடிகைகளுடன் முட்டி தேய தேய டான்ஸ் ஆடிட்டு, ரிட்டயர்மென்ட் வயசு வந்ததும் அரசியலை நோக்கி வரும் ஹீரோக்களை நேரடியாக CM தான்.

விஜய்யை வம்புக்கு இழுத்த மன்சூர் அலிகான்

அப்போ முரட்டு வில்லன்களாக மிரட்டிய எங்களின் நிலைமை என்ன தான். எங்களையும் முதலமைச்சராக ஆக்குங்கள். நானும் சினிமாக்காரன் தான். இருக்கிற எல்லா கோட்டாக்களையும் அவர்களுக்கே தூக்கிக் கொடுத்துட்டா எங்களின் கதி என்ன?’ என்று கேள்வி எழுப்புகிறார். இவர் விஜய்யை தான் சொல்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது.

ஏனென்றால் லியோ படத்தில் விஜய் த்ரிஷாவுடன் லிப் லாக் சீனில் நடித்தார். அதேபோல் டான்ஸ் என்றாலே அது தளபதி தான். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் மன்சூர் அலிகான் இப்போது விஜய்யை வம்புக்கு இழுக்கிறார். இதையெல்லாம் கேட்டதும் தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மன்சூர் அலிகானை கிழித்து தொங்க விடுகின்றனர்.