Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயகாந்த்.. ஆளே உருமாறி பரிதாபமாய் வெளிவந்த போட்டோ

அரசியல், நடிப்பு என்று பரபரப்பாக இருந்த கேப்டன் விஜயகாந்த் சமீபகாலமாக பொது வெளியில் தலை காட்டுவது கிடையாது. உடல்நல குறைவு காரணமாக வெளிநாட்டில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு வந்த அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் […]

அரசியல், நடிப்பு என்று பரபரப்பாக இருந்த கேப்டன் விஜயகாந்த் சமீபகாலமாக பொது வெளியில் தலை காட்டுவது கிடையாது. உடல்நல குறைவு காரணமாக வெளிநாட்டில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு வந்த அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் வெகு சிலரைத் தவிர அவரை மற்றவர்கள் காண்பது ரொம்பவும் அரிதாகிவிட்டது. அவ்வப்போது அவருடைய போட்டோக்கள் வெளிவந்து ரசிகர்களை ஆறுதல் படுத்தும் ஆனால் சமீப காலமாக அந்த போட்டோக்களும் வருவது கிடையாது.

இந்நிலையில் கேப்டன் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனி நடித்து கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தில் கேப்டன் ஒரு சிறு கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்று சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

மேலும் அப்படத்தில் கேப்டன் ஓரிரு காட்சிகளில் நடிக்க வேண்டி இருப்பதால் அந்த காட்சிகளை அவரது வீட்டிலேயே வைத்து படமாக்கி விட்டார்கள் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் அதைப் பற்றிய எந்த வீடியோவும், போட்டோவும் மீடியாவில் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா பிறந்தநாளை கொண்டாடிய போட்டோ ஒன்று தற்போது மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டன் தன் வீட்டிலேயே மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

அதில் விஜயகாந்தை பார்க்கும் பலருக்கும் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் திரைப்படங்களில் மிகவும் கம்பீரமாக, ஆக்ரோஷமாக சண்டை போடும் அவர் தற்போது உடல்நலக் குறைவினால் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். இருந்தாலும் பல நாட்களுக்குப் பின் அவரின் போட்டோ வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் இதை சந்தோஷத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

vijaykanth
vijaykanth
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.