வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முதல் படத்திலேயே வெற்றிக்கனியை தட்டிப்பறித்த 6 ஹீரோக்கள்.. இயக்குனராகவும் சாதித்துக் காட்டிய லவர் பாய் பிரதீப்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சில திரைப்படங்கள் ஒரு பக்கம் 100 கோடிக்கு மேல் வசூலானாலும் சில இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்களின் மகன்கள் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், நடிகர்களாக நடித்து தங்களது முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வசூலையும் ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றிருப்பர். அப்படிப்பட்ட நடிகர்கள் யார் என்பதையும் அவர்களின் திரைப்படங்கள் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

உதயநிதி ஸ்டாலின்: தனது சொந்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல திரைப்படங்களை தயாரித்து வந்தார். இதனிடையே இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமானார். முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இத்திரைப்படத்தில் திரையரங்கில் மட்டும் 100 நாட்களை கடந்து ஓடியது. ஒரு தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

விக்ரம் பிரபு: நடிகர் பிரபுவின் மகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான விக்ரம் பிரபு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். டி இமான் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், லட்சுமிமேனனும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முழுக்க முழுக்க மலைவாழ் மக்களின் வாழ்க்கை, யானையின் அன்பு என இத்திரைப்படம் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் இருவருக்குமே மிகப்பெரிய கேரியரை உருவாக்கியது.

Also Read: உதயநிதி ஸ்டாலின் ஹீரோவானதற்கு காரணம் இதுதான்.. நட்சத்திர ஹோட்டலில் நடந்த அவமானம்

ஹிப் ஹாப் தமிழா ஆதி: ஹிப்ஹாப் பாடல்கள் மூலமாக ரசிகர்களிடம் அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி விஷாலின் ஆம்பள திரைப்படத்தில் இசை அமைத்திருந்தார். அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், மீசையமுறுக்கு என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். தன் வாழ்க்கையில் நடந்த நிஜ கதையை படமாக எடுத்திருந்த நிலையில், இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்து பெரிய ஹிட்டானது.

கார்த்தி: நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி அசிஸ்டன்ட் டைரக்டராக சில வருடங்கள் இயக்குனர் மணிரத்னத்திடம் பணிபுரிந்து வந்தார். அதன்பின் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் தனது அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி, அத்திரைப்படத்தின் மூலமாக இன்று வரை முன்னணி நடிகராக உருவாகியுள்ளார். 200 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

Also Read: தொடர் வெற்றியால் இயக்குனரை டீலில் விட்ட கார்த்தி.. ஒரு வருடமாக காத்திருந்த பரிதாபம்

பிரதீப் ரங்கநாதன்: யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் தான் எடுக்கும் குறும்படங்களை அப்லோட் செய்து பிரபலமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் சமீபத்தில் லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவரது நடிப்பில் தனுஷின் சாயல் உள்ளதால் ரசிகர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியது எனலாம்.

விஜய் ஆண்டனி: தமிழில் வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆன்டனி, 2012 ஆம் ஆண்டு வெளியான நான் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு வித்தியாசமாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் அமைந்தது. அதன் பின் ஆன்டி ஹீரோவாக பல திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஓவர் நைட்டில் பிரபலமான லவ் டுடே பிரதீப்.. மேடையில் உச்சகட்ட டென்ஷன் ஆனா உதயநிதி!

Trending News