சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஒரே ஆண்டு அதிக படங்களை வெளியிட்டு மிரளவிட்ட 5 நடிகர்கள்.. ரஜினியை தூக்கி சாப்பிட்ட சத்யராஜ்

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு ஆண்டிற்கு உள்ளே பல படங்களில் சில நடிகர்கள் நடித்துள்ளனர். அவ்வாறு ஒரு ஆண்டிலேயே அதிக படங்கள் நடித்த 5 நடிகர்களை பார்க்கலாம்.

மோகன்: 1984 ஆம் ஆண்டு மைக் மோகனின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருந்தது. அந்த ஒரே வருடத்திற்குள்ளேயே மோகன் 15 படங்கள் நடித்துள்ளார். அதுவும் அவர் நடிப்பில் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானது. நூறாவது நாள், 24 மணி நேரம், விதி, ஓசை, உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் அதே ஆண்டு வெளியானது.

கமலஹாசன்: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக மாறி உள்ளவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் 1978 இல் மட்டும் 19 படங்களில் நடித்துள்ளார். இளமை ஊஞ்சலாடுகிறது, சட்டம் என் கையில், அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், நிழல் நிஜமாகிறது போன்ற படங்கள் அந்த ஆண்டு வெளியானது.

விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 156 படங்களுக்கு மேல் நடித்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு மட்டும் 19 படங்களில் வெளியானது. அந்த ஆண்டு நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், நல்ல நாள், வெற்றி, வேங்கையின் மனிதன் ஆகிய படங்கள் வெளியானது.

ரஜினிகாந்த்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் முலம் சினிமாவில் ரஜினியை அறிமுகமானார். இதை தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் 1978 இல் மட்டும் ரஜினி 21 படங்களில் நடித்திருந்தார். அந்த ஆண்டு பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுது, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், பிரியா போன்ற படங்கள் வெளியானது.

சத்யராஜ்: சத்யராஜ் 1978ஆம் ஆண்டு சட்டம் என் கையில் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் 1985ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 25 படங்கள் சத்யராஜ் நடிப்பில் வெளியானது. நான் சிகப்பு மனிதன், முதல் மரியாதை, பகல் நிலவு, பிள்ளை நிலா, சாவி போன்ற படங்கள் அந்த ஆண்டு வெளியானது.

Trending News