செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

ரஜினி, கமலே பார்த்து மிரண்டு போன நடிகர்.. பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயாராக இருந்த தயாரிப்பாளர்கள்

இப்போது தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார். அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

இல்லையென்றால் இப்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அந்த நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே பயந்து நடுகிறார்கள். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி தான்.

Also Read : ரஜினி, கமலையே ஓரம் கட்டிய ஹீரோ.. 90களில் பட்டையை கிளப்பிய வெள்ளி விழா நாயகன்

அந்த அளவுக்கு ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்று இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ரஜினி, கமல் போன்ற நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அதிக ஹிட் கொடுத்தது.

அதுமட்டுமின்றி அப்போது ராமராஜனுக்கு தமிழ் சினிமாவில் அதிக மவுசு இருந்த காரணத்தினால் ஒரு துண்டு சீட்டில் ராமராஜன் இந்த இயக்குனர் படத்தில் நடிப்பதாக கால்ஷீட் தேதியை எழுதி கொடுத்து கையெழுத்து போட்டால் மட்டுமே போதுமாம். தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணம் போட்டும் படத்தை எடுக்க தயாராக இருப்பார்களாம்.

Also Read : ரஜினி பெயரை கெடுக்க வந்த வாரிசு.. தெரியாமல் மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

அதேபோல் ராமராஜன் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரிடம் பணம் கேட்டாலும் அவர்கள் கொடுக்கவும் தயாராக இருப்பார்களாம். ஏனென்றால் அந்த காலத்தில் ராமராஜனின் படங்கள் 100% உறுதி என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் முழுமையாக நம்பினார்கள்.

இந்நிலையில் தனது மனைவி நளினியை விவாகரத்து பெற்று நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராமராஜன் அதன் பின்பு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும் அரசியலில் கவனம் செலுத்தி வந்த ராமராஜன் இப்போது மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Also Read : கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுக்கும் ரஜினி.. ரோலக்ஸ் செய்யப் போகும் சம்பவம்

Trending News