சில இயக்குனர்களின் மகள்கள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களின் மத்தியிலும் ஸ்பெஷல் ஆகவே பார்க்கப்படுகிறார். ஏனென்றால் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த முதல் படமான விருமன் படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான தாவணி பாவாடையில் கிராமத்துப் பெண்ணாக நடித்துக் கலக்கியிருக்கிறார்.

இதனால் நாளை ரிலீசாக இருக்கும் விருமன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்தப்படத்தில் அதிதிக்கு 25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சிம்புவுடன் மற்றொரு படத்திலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில் விருமன் படத்தில் தாவணி பாவடையில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கும் அதிதியின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. இதில் அதிதி ஷங்கர் கவர்ச்சி கூடுதலாக இருக்கும் உடையை அணிந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

