திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

நடிப்பில் ஆழமாய் பதிந்த ஆண்ட்ரியாவின் 5 படங்கள்.. இப்பவும் ராஜன் பொண்டாட்டிக்கு குறையாத மாஸ்

நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் திறமை கொண்டவர் தான் ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் ஒரு பின்னணி பாடகியாக தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் பாடியதன் மூலம் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பச்சைக்கிளி முத்துச்சரம்: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஆண்ட்ரியா ஜெர்மையா, நடித்த திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம். சிம்ரன், தபு, சோபனா போன்ற நடிகைகளின் தேர்வில் இறுதியில் ஆண்ட்ரியா தேர்வானார். இந்த படத்தில் இவர் கல்யாணி வெங்கடேசன் என்னும் கதாபாத்திரத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்தார்.

Also Read: புத்திசாலித்தனமாக வெளியிட்ட சிபிராஜ், ஆண்ட்ரியாவின் வட்டம் பட விமர்சனம்.. வொர்த்தா இல்லையா.?

ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் இயக்கத்தில் வெளியான வரலாற்று திரைப்படம் இது. இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் கார்த்தி சிவகுமார், ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஆண்ட்ரியா வரலாற்று ஆராச்சியாளராக நடித்திருந்தார். மேலும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து ‘உன் மேல ஆச தான்’ பாடலையும் பாடியிருக்கிறார்.

விஸ்வரூபம்: உலக நாயகன் கமலஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த படம் விஸ்வரூபம். இந்த படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பட ரிலீஸின் போது மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தது. இந்த படத்தில் ஆண்ட்ரியா அஸ்மிதா சுப்பிரமணியம் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். உலக நாயகன் கமலுக்கு இணையாக இவர் ஆடிய கதக் நடனம் காண்போரை வியக்க செய்தது.

Also Read: ஆண்ட்ரியாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்.. புள்ளி வைத்து கோலம் போட்ட பிரபல நடிகை

தரமணி: இயக்குனர் ராம் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ராம் இயக்கத்தில். இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் அஞ்சலியும் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ஆண்ட்ரியா ஆல்தெனா ஜான்சன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூகத்தின் இரு வேறு சூழலில் இருக்கும் ஆணுக்கும், பெண்ணுக்குமான காதல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை இந்த படம் பேசியிருந்தது.

வடசென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி நடித்த திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் ஆண்ட்ரியா நடித்த சந்திரா கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. தன்னுடைய சிறப்பான நடிப்பால் மொத்த பார்வையாளர்களையும் மிரட்டியிருப்பார் ஆண்ட்ரியா ஜெர்மையா.

Also Read: ஆண்ட்ரியாவின் பாட்டி லுக்கை வைத்து ரெடியானது பிசாசு 2 பர்ஸ்ட் லுக்.. ஒரிஜினல் போட்டோ உள்ளே

Trending News