புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜாதியை உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க.. அரசியல் பேசும் ஆண்ட்ரியாவின் மனுஷி ட்ரெய்லர்

Manushi Trailer: சமூக நீதி, அரசியல் பேசும் படங்கள் இப்போது கவனத்தை ஈர்க்க ஆரம்பித்து விட்டன. அப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது மனுஷி ட்ரெய்லர்.

அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நாசர், விஜி சந்திரசேகர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

வெற்றிமாறன் தயாரிப்பில் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஆண்ட்ரியா போலீசாரின் விசாரணை வட்டத்திற்குள் வருகிறார்.

அரசியல் பேசும் ஆண்ட்ரியா

இயற்பியல் ஆசிரியராக கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இவர் தீவிரவாதி ரேஞ்சுக்கு விசாரிக்கப்படுகிறார். அப்போது இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அனல் தெறிக்கிறது.

சொந்த மக்களை சுயமா யோசிக்க விடாதது தான் சர்வாதிகாரத்தின் உச்சம். எங்களுடைய பெயரை எங்க விருப்பத்திற்கு எழுத விட மாட்டீங்களா? சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க போன்ற வசனங்கள் ஃபயராக இருக்கிறது.

இப்படி ட்ரெய்லர் முழுவதும் அழுத்தமான நடிப்பை கொடுத்த ஆன்ட்ரியா அரசியலும் பேசி இருக்கிறார். இதுவே எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் நிலையில் சர்ச்சை ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Trending News