வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அசின் கணவரின் சொத்து மதிப்பை கேட்டா தல சுத்துது.. பதார்த்தமாக வலை வீசி செட்டில் ஆன நடிகை

Actress Asin Net Woth: நடிகை அசின் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே கமல், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களோடு நடித்து, டாப் ஹீரோயின் ஆக வலம் வந்தவர். உண்மையை சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்த நடிகை திரிஷாவின் ஒட்டு மொத்த மார்க்கெட்டையும் அடித்து நொறுக்கியதோடு தளபதி விஜய்யின் ஆஸ்தான ஹீரோயினாகவும் மாறியவர்.

விளம்பரங்களில் நடிக்கும் மாடலாக தான் அசின் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். உள்ளம் கேட்குமே படம் இவருக்கு அறிமுக படமாக இருந்தாலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவுடன் நடித்த கஜினி படம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்ததோடு, தமிழ் சினிமாவின் மார்க்கெட்டிலும் முன்னிலைக்கு வந்தார்.

Also Read:விக்னேஷ் சிவனுக்கு உச்சகட்ட பயத்தை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்ட நயன்தாரா.. வீடியோ பார்த்தாலே பக்குனு இருக்கு

அசினின் தமிழ் சினிமா என்ட்ரிக்கு பிறகு, அப்போதிருந்த முன்னணி ஹீரோயின்கள் பலரும் கொஞ்சம் ஆட்டம் கண்டு தான் போனார்கள் என்று சொல்லலாம். திரிஷாவுக்கு போக வேண்டிய அத்தனை வாய்ப்பு அப்படியே அசின் பக்கம் திருப்பியது. போக்கிரி படத்திற்கு பிறகு அசினுக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் சல்மான் கான் உடன் ஜோடி போட்டார்.

தளபதி விஜய்யின் காவலன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த அசின், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தும் சினிமாவை தொடராமல், சட்டென்று திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட் இருக்கும்பொழுது இவர் திருமணம் செய்து கொள்வது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது. தற்போது தான் அதற்கான காரணம் வெளிவந்து இருக்கிறது.

Also Read:சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

நடிகை அசின் திருமணம் செய்திருக்கும் ராகுல் சர்மா தான் மைக்ரோ மேக்ஸ் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளராவார். மேலும் இவருக்கு கிட்டத்தட்ட 1330 கோடிக்கு சொத்து மதிப்பு இருக்கிறது. இப்படி ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு சினிமாவில் சம்பாதிப்பது என்பது ரொம்பவும் சொற்பம் என்பதால் தான் அசின் நடிப்புக்கு டாட்டா காட்டி இருக்கிறார்.

சமீபத்தில் கூட நடிகை அசின் அவருடைய கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அசின் இது எல்லாம் வதந்தி தான் எந்த உண்மையையும் இல்லை என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்து இருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Also Read:சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

Trending News