செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

23 வருடங்களுக்குப் பிறகு அஜித் படத்தில் இணையும் நடிகை.. பெருமூச்சு விட்ட விக்னேஷ் சிவன்

துணிவு படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஏகே 62 படத்தில் அரவிந்த்சாமி மற்றும் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது. மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தில் முதலாவதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்பு திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

Also Read : வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

விக்னேஷ் சிவனின் ஈகோவால் திரிஷா இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஏகே 62 படத்திற்கு கதாநாயகிக்காக பல நடிகைகளை வலை வீசி தேடி வந்தார் விக்னேஷ் சிவன். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

மேலும் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அஜித்துக்கு உண்டான காட்சிகளை படமாக்கலாம் என்று விக்னேஷ் சிவன் திட்டம் தீட்டி இருந்தார். இப்போது ஒரு வழியாக ஏகே 62 படத்திற்கு கதாநாயகியை விக்னேஷ் சிவன் புக் செய்து விட்டாராம். கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார்.

Also Read : 5 நாட்களில் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரிப்போர்ட்.. ஆட்ட நாயகனாக நிரூபித்த அஜித்

அதாவது 2000 ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபுவும், மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் ஏகே 62 படத்தில் முதல் முறையாக அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த சூழலில் இப்போது மீண்டும் தமிழ் படமான ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் இணைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : ரசிகர்கள் தான் எப்பொழுதும் அடித்துக் கொள்வார்கள்.. இப்ப விஜய், அஜித் தயாரிப்பாளர்களே அடித்துக் கொள்கிறார்கள்.!

Trending News