வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இதுக்கு தான் மும்பையில செட்டில் ஆனோம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய சூர்யா

Surya Jyothika: தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர தம்பதிகளில் 2k கிட்ஸ் வரை கொண்டாடுவது சூர்யா மற்றும் ஜோதிகா வைத்தான். சூர்யா ஜோதிகா போல் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் கனவாக இருக்கும். அதை தாண்டி இந்த காலத்திலும் கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள், அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள், அண்ணன் தம்பி அதிக பாசத்தில் இருக்கிறார்கள் என அந்த வீட்டின் மீது பெரிய மரியாதை உண்டு.

சூர்யா மற்றும் கார்த்தியின் அண்ணன் தம்பி பாசம் எல்லாம் பருத்திவீரன் சர்ச்சையிலேயே வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. தம்பி ஹீரோவாக அண்ணன் காசு கொடுத்து உதவ முடியாத நிலைமையில் இருக்கும்பொழுது வீட்டின் நிலைமை என்ன என்று தெரிந்து விட்டது. அதற்கு முன்பாகவே சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பைக்கு குடி போனது பெரிய அளவில் பேசப்பட்டது.

சமீபத்தில் நடிகை ஜோதிகா கொடுத்த பேட்டி ஒன்றில் எதற்காக மும்பைக்கு குடி போனார்கள் என்ற காரணத்தை சொல்லி இருக்கிறார். இதெல்லாம் நியாயமே இல்லை என்று ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு அந்த காரணம் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது அவருக்கு மற்ற மொழி பட வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நடிகர் சூர்யாவுக்கு முழுக்க முழுக்க சென்னையை நம்பி தொழில் இருக்கும் பொழுது எதனால் மும்பைக்கு குடியேறினார் என்பது எல்லோருக்கும் சந்தேகமாக இருந்தது. ஜோதிகா அதற்கு, அவருடைய அப்பா மற்றும் அம்மாவின் உடல் நிலையை பற்றி சொல்லி இருக்கிறார். ஜோதிகாவின் அப்பா அம்மாவுக்கு இரண்டு முறை கொரோனா வந்து சென்றதாம். அவர்கள் உடல்நிலை கொஞ்சம் சரியாக இல்லையாம்.

Also Read:முத்தி போன சண்டை.. முடிவுக்கு வரும் உலக அழகியின் திருமண வாழ்க்கை

கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்க்கையில் அப்பா அம்மாவை அவ்வப்போது தான் சந்தித்து வந்தாராம். இனி என்னுடைய அப்பா அம்மா உடன் சிறிது காலம் செலவழிக்க நான் விரும்புகிறேன், அதனால் தான் மும்பைக்கு குடி போனோம் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிள்ளைகளுக்கும் அங்கு கல்வித் தரம் நன்றாக இருப்பதால் அங்கே நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

ஜோதிகா சொன்ன காரணம்

ஜோதிகாவின் இந்த முடிவுக்கு சூர்யாவும் உடனே ஓகே சொல்லி விட்டாராம். ஜோதிகாவுக்கு அப்பா அம்மா உடன் இருக்க வேண்டும் என்றால், சூர்யாவுக்கு அவருடைய அப்பா அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று தோணாதா?, இதே போன்று கார்த்தியின் மனைவி அவருடைய அப்பா அம்மா உடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் கார்த்தியும் அந்த வீட்டை விட்டு போக வேண்டும்.

அப்படி பார்த்தால் சிவகுமார் மற்றும் அவருடைய மனைவிக்கும் தான் வயது அதிகமாகி விட்டது. சூர்யா ஏன் இதை யோசிக்காமல் ஜோதிகா சொன்ன முடிவுக்கு தலை அசைத்தார் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். நடிகர் விஜய் அவருடைய அப்பா அம்மாவுக்கு ஒரே மகனாக இருந்தும் அவர்களை தனியாக விட்டுவிட்டு நீலாங்கரை வீட்டில் வசித்து வருகிறார். திரையில் நமக்கு அறிவுரை சொல்லும் ஹீரோக்கள், உண்மை வாழ்க்கையில் அதையெல்லாம் கடைபிடிப்பதில்லை என்பது கசப்பான உண்மை ஆகிவிட்டது.

Also Read:கோலிவுட் கொண்டாடிய ஆதிக் கல்யாணம்.. ஹீரோயின் லுக்கில் செமையா வந்த அஜித், ஷாலினியின் மகள்

Trending News