சுமார் எட்டு வருடங்களாக காதலித்த கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி இருவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். எனவே திருமணமான கையோடு சினேகன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளம்பிவிட்டார்.
ஏற்கனவே சினேகன் பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மீண்டும் பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் சினேகன் அவ்வப்போது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னுடைய இருப்பை அழுத்தமாக பதிவு செய்து கொண்டிருக்கிறார். இன்னிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா, புருஷன் போன கவலை கொஞ்சம்கூட இல்லாமல் ஃபுல் மேக்கப்பில் விதவிதமான போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், ‘தலைவன் தொலைவில் இருக்க, தலைவி தனியே தலைவனை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறாள்’ என்பது போன்ற கவிதைகளால் வர்ணிக்கின்றனர் அத்துடன் ஒரு சிலர் தனியாக சினேகன் இல்லாமல் ஜாலியாக இருக்கும் கன்னிகாவை கிண்டலடித்தும் கொண்டிருக்கின்றனர்.