புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லெட்டர் அனுப்பிய கார்த்தி, கிழித்தெறிந்த லைலாவின் அப்பா.. அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா!

Actress Laila: தமிழ் சினிமாவில் ஜெனிலியாவுக்கு முன்பே க்யூட்நசால் ரசிகர்களை கொள்ளை அடித்தவர் தான் லைலா. கன்னத்தில் விழும் குழி, கண்கள் மூடிய சிரிப்பு இன்றுவரை லைலாவுக்கு நிகர் யாருமே இல்லை.

அஜித்- லைலா, பிரசாந்த்- லைலா, பிரபுதேவா- லைலா, விக்ரம்- லைலா இந்த கெமிஸ்ட்ரியின் உருவான படங்கள் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் லிஸ்டில் இன்று வரை இருக்கிறது. அதிலும் சூர்யா மற்றும் லைலாவின் நடிப்பில் பிதாமகன் படத்தில் வரும் காமெடி எல்லாம் வேற லெவல்.

சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே தன்னுடைய நீண்ட நாள் ரசிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் லைலா. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த லைலா சர்தார் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா!

தற்போது தளபதி விஜய் நடித்திருக்கும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர் கார்த்தி மற்றும் லைலாவுக்கு இடையே நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது லைலாவுக்கு கார்த்தி ஓட்டு படிவத்தை போஸ்ட் செய்து அனுப்பி இருக்கிறார்.

அந்த படிவத்தில் இருக்கும் பெயர்களில் தான் தேர்ந்தெடுக்கும் நபரை குறித்து லைலா திரும்பிய அதை அனுப்ப வேண்டும். இந்த கடிதம் லைலாவின் அப்பா அம்மா இருக்கும் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

லைலாவின் அப்பா கடிதத்தை பிரித்துப் பார்த்த பொழுது முழுக்க தமிழில் இருந்ததால் அவர் புரியாமல் அதை குப்பையில் வீசி விட்டாராம். அதன் பின்னர் கார்த்தி லைலாவுக்கு போன் செய்து போஸ்ட் அனுப்பிய விவரத்தை சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் லைலா உடனே தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்திருக்கிறார். அந்த லெட்டரை குப்பையில் போட்டதை விவரித்த லைலாவின் அப்பா அதன் பின்னர் தேடி லைலாவிடம் கொடுத்து இருக்கிறார். இந்த சுவாரஸ்யமான நிகழ்வை சமீபத்திய பேட்டி ஒன்றில் லைலா பகிர்ந்திருக்கிறார்.

Trending News