வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இவ்வளவு மலிவா விலை போயிட்டீங்களே ஆண்டவரே.. ஒரே வார்த்தையில் கமல் சாயத்தை வெளுத்த கஸ்தூரி

Kamal-Kasturi: நடிப்பு, அரசியல் என ஓடிக் கொண்டிருக்கும் கமல் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதிலும் பார்ட் டைம் அரசியல்வாதி என்ற கேலி கிண்டல்கள் தான் அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதே கிடையாது.

ஆனால் நேற்று அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களை வாரி இறைத்துள்ளது. அதாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற யூகம் பல மாதங்களாகவே இருந்தது.

அதற்கேற்றார் போல் தான் இருந்தது ஆண்டவரின் நடவடிக்கைகளும். தற்போது அதை உறுதி செய்யும் பொருட்டு இந்த கூட்டணி இணைந்துள்ளது. ஆனால் அங்கு தான் கமல் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். அதாவது இந்த தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடப் போவதில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also read: பதவி ஆசை எனக்கு இல்லை.. கூட்டணியை உறுதி செய்து கடைசியில் ட்விஸ்ட் வைத்த கமல்

மேலும் அடுத்த வருடம் நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில் தற்போது ஒட்டுமொத்த மக்களும் கமலை விமர்சித்து வருகின்றனர்.

அதில் நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முன் வைத்துள்ளார். அதாவது நீங்கள் விலை போவீர்கள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு மலிவாக விலை போயிட்டீங்களே ஆண்டவரே என நக்கலாக கூறியுள்ளார். மேலும் உங்களை நம்பி கட்சியில் பயணித்தவர்களுக்கு கன்னத்தில் விழுந்த அறை தான் இது எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தான் மக்களும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆண்டவர் புது மாற்றம் கொண்டு வருவார் என்று பார்த்தால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாரே. இதன் மூலம் கமலின் சாயம் வந்துவிட்டது என நெட்டிசன்கள் ஆண்டவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Also read: சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்ட கமல் எடுத்த அட்டகாசமான முடிவு.. கை நிறைய அள்ளிக் கொடுத்த ஆண்டவர்

Trending News