சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காதல் பிசாசுன்னு கிறுக்கு பிடிக்க செய்த மீரா ஜாஸ்மின்.. 30 படங்களில் வெறும் மூன்றே ஹிட் தான்

Actress Meera Jasmin hits: movies: மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சுமார் 20 வருஷத்தில் 30க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ‘புடுங்குனதெல்லாம் தேவையில்லாத ஆணி’ என்பது போல் வெறும் மூன்றே படம் தான் ஹிட் அடித்து இருக்கிறது.

இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான ரன் படமே ஹிட் தான். இந்த படத்தில் ‘காதல் பிசாசே’ என்ற பாடலில் செம க்யூட்டாக நடனமாடி இளசுகளை வசியம் செய்த மீரா ஜாஸ்மின், தன்னுடைய அழகால் ரசிகர்களை மயக்கி பைத்தியம் பிடிக்க வைத்தார். இந்த படத்தில் மாதவனுக்கு சரியான ஜோடி என மீரா ஜாஸ்மின் கொண்டாடப்பட்டார்.

இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. ரன் படத்திற்கு பின் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா போன்ற தோல்வி படங்களை கொடுத்து, அதன் பின்பு தான் ஆயுத எழுத்து என்ற படத்தில் சசி என்ற கேரக்டரில் நடித்து தமிழில் இரண்டாவது ஹிட் படத்தை கொடுத்தார்.

Also read: தாவணி போட்ட தீபாவளி மீரா ஜாஸ்மின் நடித்த 5 ஹிட் படங்கள்.. கிறுக்குத்தனமாக விஜய்யை காதலித்த மீரா

நடிகை மீரா ஜாஸ்மின் ஹிட் கொடுத்த 3 படங்கள்

இவருடைய மூன்றாவது ஹிட் படம் விஷாலுடன் நடித்த சண்டக்கோழி. இந்த படத்தில் இவரை பார்த்ததுமே இளசுகளுக்கு காதல் பற்றி கொண்டது. அந்த அளவிற்கு இந்த படத்தில் அவருடைய லுக் மற்றும் ரியாக்ஷன் மூலம் இளைஞர்களை கிறுக்கு பிடிக்க வைத்தார்.

இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இவர் தமிழில் நடித்த இந்த மூன்று படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதை தொட்டது. இப்போது மறுபடியும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று 41 வயதில் கிளாமர் தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வந்த பாடில்லை.

Also read: சாய் பல்லவிக்கு பின் நடனத்தில் ஆட்டி படைக்க போகும் ஹீரோயின்.. இப்பவே சூர்யா துண்டு போடும் பெண் பிரபு தேவி

Trending News