புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாய்ப்பு வரும்போது வரட்டும் என தெனாவட்டு காட்டும் 5 ஹீரோயின்ஸ்.. ஸ்ருதிஹாசன் லிஸ்டில் சேர்ந்த நடிகைகள்

சினிமாவிற்கு வரும்போது பூனையாக இருந்து, அதன் பிறகு புலியாக மாறும் நடிகைகள் தங்களது நடிப்பில் முன்னேற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ திமிருக்கும் தெனாவட்டிருக்கும் குழைச்சு இல்லாமல் இருக்கிறது. அதிலும் உலக நாயகன் கமலஹாசனின் மகளாக ஸ்ருதிஹாசன் காட்டிய தெனாவட்டு கொஞ்ச நஞ்சமல்ல. அதனால்தான் தற்போது அவருக்கு பட வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டது. இவருடைய லிஸ்டில் இன்னும் 5 நடிகைகள் சேர்ந்துள்ளனர்.

வரலட்சுமி: பிரபல நடிகர் சரத்குமாரின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு 2021-ல் அதிக படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் இவரும் இடம்பிடித்தார்.

பிறகு இவருக்கு குவியும் வாய்ப்புகளைப் பார்த்து, ஓவர் திமிரு காட்ட துவங்கிய வரலட்சுமிக்கு, அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடித்த அடுத்தடுத்த படங்கள் கிடைக்காததால், தற்போது பொட்டியை கட்டிக்கொண்டு ஹைதராபாத்திற்கு குடியேறிவிட்டார். அங்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் வரலட்சுமி, தற்போது டோலிவுட்டை குறி வைத்திருக்கிறார்.

Also Read: கமலஹாசன் தூவிய விதை.. தாலி நோ, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தில் ஊறிப்போன 8 ஜோடிகள்

ரெஜினா: தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் இவர், லைலா நடித்த கண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் போன்ற படங்களில் நடித்த பிறகு ஓவர் கெத்து கட்டத் தொடங்கினார். இதனால் இவருக்கு தற்சமயம் பட வாய்ப்புகள் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டி: தொடக்கத்தில் நிறைய தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அடுத்த படமே இவருக்கு தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் விருப்பமான நாயகியாக மாறினார்.

சிங்கம், வானம், சகுனி, தெய்வத்திருமகள் போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அனுஷ்கா, வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை எக்குத்தப்பாக ஏற்றி, அதன் பிறகு தன்னுடைய மார்க்கெட்டை இழந்து இவருக்கு சுத்தமாகவே வாய்ப்பு வராமல் போனது.

Also Read: உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்.. அனுஷ்காவை தூக்கி சாப்பிட்ட அரேபிய குதிரை

அதிதி ராவ்: தமிழ், இந்திப் படங்களில் நடித்திருக்கும் இவர், 2018ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய்சேதுபதி நடித்திருக்கும் செக்க சிவந்த வானம் படத்திலும், அதைத்தொடர்ந்து வெளியான பத்மாவத் படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு காற்று வெளியிடை, சைக்கோ போன்ற படங்களில் நடித்தார் தொடர் வெற்றிகளை சுவைத்துக் கொண்டிருந்த இவர், பின் தெனாவட்டு காட்டும் ஹீரோயின் லிஸ்டில் சேர்ந்துவிட்டார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

Also Read: மூக்கு சர்ஜரிக்கு முன் அதிதி ராவ்வை பார்த்திருக்கிறீர்களா.? அடையாளமே தெரியாத புகைப்படம்

ரித்திகா சிங்: ஹிந்தி, தெலுங்கு படங்களில் தனது சினிமா பயணத்தை துவங்கிய இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இந்தப்படத்தில் அவரது நடிப்பிற்காக 63-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு குறிப்புகளில் அவரது பெயர் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் சினிமாவில் திமிரு காட்டும் நடிகையாக தெரியத் துவங்கினார். அது அவருடைய சினிமா கெரியோரை பெரிதும் பாதித்தது.

இவ்வாறு இந்த ஐந்து நடிகைகளும் வளரும் வரைக்கும் அமைதியாக இருந்து விட்டு, வாய்ப்பு வரும்போது வரட்டும் என தெனாவட்டு காட்டி தங்களது சினிமா கேரியரை தொலைத்து நிற்கின்றனர்.

Trending News