செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திரிஷா நயன்தாராவை ஓவர் டேக் பண்ணும் நடிகை.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வரும் குழாயடி சண்டை

Actress overtaking Trisha Nayanthara: நயன்தாரா சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்னாடியே த்ரிஷா ஹீரோயினாக என்டரி கொடுத்து வந்துவிட்டார். ஆனாலும் த்ரிஷாவை விட நயன்தாரா அனைவரது மனதையும் கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுவிட்டார். இதனாலையே இவர்களுக்கு இடையே போட்டியும் பொறாமையும் அதிகமாகிவிட்டது.

முக்கியமாக த்ரிஷா, நயன்தாரா மீது பொறமையில் பொங்கும் அளவிற்கு கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்து தனித்துவத்தை காட்டிவிட்டார். இப்படி இவர்கள் இருவரும் நான் தான் பெஸ்ட் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு குழாயடி சண்டை போட்டு வருகிறார்கள். இதில் இவர்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு இன்னொரு நடிகை கமுக்கமாக சில விஷயங்களை செய்து வருகிறார்.

இப்போதைக்கு நயன்தாராக்கு அடுத்து ஆல் ரவுண்ட் நடிகை என்ற பெயரை எடுத்துவிட்டார். அதனால் ஒரு பக்கம் அந்த நடிகையை அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஏனென்றால் அந்த நடிகை நடிக்கும் படங்கள் முக்கால்வாசி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தான். இதுவரை அவர் நடித்த 20 படங்களில் கிட்டத்தட்ட 15 படங்களும் பெண்கள் மனதை கவரும் படங்கள்.

Also read: தொடர்ந்து மன வேதனையில் இருக்கும் நயன்தாரா.. ஆறுதல் அளிக்குமா இந்த டெஸ்ட்!

இதனை தொடர்ந்து அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாகவும் அவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த ஒரு விஷயத்தை தான் நயன்தாராவும் ஃபாலோ பண்ணினார். அதே போல இவரும் அந்த ட்ரிக்ஸ்சை ஃபாலோ பண்ணி வருகிறார். அவர் வேறு யாருமில்லை காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஃபர்கானா, ரன் பேபி ரன், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தும் ஒரு போராடக்கூடிய கேரக்டரை முன்னிறுத்தி காட்டப்பட்டிருக்கும். அதனாலேயே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து இது சம்பந்தமான கதைகளும் படங்களும் தேடி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழில் மூன்று படங்களும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கமிட்டாகி ஆல் ரவுண்ட் ஹீரோயின் என்று சொல்லும் அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார். இப்படியே போனால் இவரை அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்னு தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

Also read: 12 டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒருத்தரை மட்டும் கழட்டிவிட்ட த்ரிஷா.. யார் தெரியுமா?

Trending News