புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்படி என்ன உனக்கு அவசரம்!. அக்காவிற்கு முன்பே காதலனை அறிமுகப்படுத்திய சாய் பல்லவியின் தங்கை

Actress Sai Pallavi’s younger sister introduced her lover: நேச்சுரல் பியூட்டியான நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக தற்போது ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 21 உட்பட ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சாய்பல்லவி சகோதரியான பூஜா தனது வருங்கால கணவரை சோசியல் மீடியாவில் வெளிப்படையாக அறிவித்து பேசும் பொருளாக மாறி உள்ளார். சாய் பல்லவியின் சகோதரி பூஜாவும், முதலும் கடைசியுமாய் 2021ல் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா இயக்கிய ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தப் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிகை பூஜா நடிக்காமல் பிசினஸில் செம பிஸியாக இருக்கிறார். இவர் அப்படியே சாய் பல்லவி மாதிரியே இருப்பதால்தான், அந்த ஒரு பட வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இப்போது பூஜாவின் பிசினஸ் பார்ட்னராக இருந்து வரும் வினித் என்பவர் தான், தன்னுடைய வாழ்க்கைப் பார்ட்னராகவும் மாறி உள்ளதாக அவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோஸ் போன்றவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்டாக்குகிறார்.

Also Read: குடும்ப குத்து விளக்கு கேரக்டருக்கு மட்டும் செட் ஆகும் 5 நடிகைகள்.. சிரிப்பிலும் நடிப்பிலும் கொள்ளை அடித்த சாய்

அக்காவுக்கு முன்பு திருமணத்திற்கு  அப்படி என்ன அவசரம்

‘அக்காவே இன்னும் திருமணத்திற்கு அவசரப்படாமல் இருக்கும்போது உனக்கென்ன?’ என்று ரசிகர்கள் பூஜாவிடம் கேள்வி எழுப்புகின்றனர். இருந்தாலும் இது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று சிலர் பூஜாவிற்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது போல, தற்போது மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் சாய் பல்லவி அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள மாட்டார். ஆனால் அவருடைய குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் பூஜாவின் திருமண தேதியும் வெளியிட உள்ளனர்.

காதலனை அறிமுகப்படுத்திய சாய் பல்லவியின் தங்கை

Sai is Pallavi's younger sister-cinemapettai
Sai is Pallavi’s younger sister-cinemapettai

Also Read: இந்த ஆண்டில் கலக்க போகும் 5 முத்தின கத்தரிக்காய்.. எல்லா படத்தையும் வளச்சு போட்ட ஆன்ட்டி ஹீரோயின்

Trending News