வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லவ் பண்ணிட்டு 4 ஹீரோக்களை கழட்டி விட்ட திரிஷா.. மிளகாய் பொடி மாமிக்கு ஆப்பு அடிச்ச அஜித்

Actress Trisha fell in love with top 5 heroes: துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இப்போது டாப் ஹீரோயின் ஆக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. 40 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பேரழகியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த 5 படங்களில் டாப் ஹீரோக்களை காதலித்து கழட்டி விட்டிருக்கிறார். ஆனால் அவருக்கே தல அஜித் ஆப்பு அடித்த சம்பவம் நடந்திருக்கிறது.

மௌனம் பேசியதே: திரிஷா, சூர்யா, லைலா இணைந்து நடித்த படம் தான் மௌனம் பேசியதே. இந்த படத்தில் பெண்களே ஆகாது என இருந்த சூர்யா திரிஷாவை பார்த்தபின் காதல் வயப்படுவார். திரிஷாவும் சூர்யாவை காதலிப்பதாகத்தான் தெரியும். ஆனால் கடைசியில் சூர்யா போன்றே இருக்கும் தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்தி பயங்கர ஷாக் கொடுத்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கிய இந்த காதல் திரைப்படத்தில் இந்துவான கார்த்திக்கும் கிறிஸ்டினான ஜெசிக்கும் காதல் ஏற்படும். இந்த கதாபாத்திரத்தில் சிம்பு, திரிஷா இருவரும் நடித்தனர். இந்த படத்தில் திரிஷா சிம்புவை உருக உருக காதலித்து, அதன் பின் ஒரு சில குடும்பப் பிரச்சனையால் திரிஷா சிம்புவை கழட்டி விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வார்.

கொடி: தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்த இந்த படத்தில் திரிஷா வில்லியாக நடித்தார். கொடி கேரக்டரில் நடிக்கும் தனுஷை காதலிக்கும் திரிஷா, அதன் பின் அரசியலின் பதவிக்காக ஆசைப்பட்டு தன்னுடைய காதலனையே போட்டுத் தள்ளி விடுவார்.

Also Read: GOAT டேக் லைனில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி..! வெங்கட் பிரபுவின் மாஸ் ஆன சம்பவம்

டாப் ஹீரோக்களை காதலித்து கழட்டி விட்ட திரிஷா

96: இந்த படத்தில் பள்ளிப் பருவத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் காதலித்தனர். ஆனால் அதன் பின் காலேஜ் படிக்கும் போது இருவரும் வேறு வேறு இடத்திற்கு எதிர்பாராத விதமாய் பிரிந்து சென்று, அதன் பின் திரிஷா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வார். கடைசி வரை விஜய் சேதுபதி தான் திருமணம் ஆகாமல் தன்னுடைய காதலியின் நினைவிலே வாழ்வார்.

மங்காத்தா: அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்த இந்த படம் இன்றும் தல ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. இதில் அஜித், திரிஷா இருவரும் காதலர்களாக நடித்தனர். ஆனால் கடைசியில் இந்த படத்தில் அஜித் திரிஷாவை கழட்டி விடுவார். சாமி படத்தில் விக்ரமுக்கு மிளகாய் பொடி வீசிய திரிஷாவிற்கு, அஜித் மங்காத்தா படத்தில் சரியான ஆப்பு அடித்தார்.

Also Read: புத்தாண்டில் திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி.. பொண்ணு யாரு தெரியுமா?.

Trending News