வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

38 வயதில் 2-வது மனைவியாகும் வரலட்சுமி.. வைரலாகும் மாப்பிள்ளையின் முதல் மனைவி, மகள் புகைப்படங்கள்

Actress Varalaxmi Sarathkumar: நடிகர் விஷாலுடன் காதல் தோல்விக்கு பிறகு, இனி கல்யாணமே வேண்டாம் என வைராக்கியத்துடன் இருந்தவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். ஆனால் இப்போது இவருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

38 வயதாகும் வரலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிக்கோலய் சச்தேவுக்கு இரண்டாவது மனைவியாவது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது நிக்கோலய் சச்தேவ் உடைய முதல் மனைவி கவிதா மற்றும் அவருடைய 15 வயது மகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.

பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கு பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார். படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு ஷங்கரின் பாய்ஸ் மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் தன்னுடைய தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதை தவறவிட்டார்.

நிக்கோலய் சச்தேவ்-ன் முதல் மனைவி கவிதா

nicholai-sachdev-first-wife-cinemapettai
nicholai-sachdev-first-wife-cinemapettai

Also Read: திருமண வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கும் நாட்டாமையின் மகள்.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

விவாகரத்து ஆனவருக்கு 2வது மனைவியாகும் வரலட்சுமி

பின்பு நடிப்பில் உறுதியாக இருந்த வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் வில்லியாகவும் ரவுண்டு கட்டிய வரலட்சுமி இப்போது கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார்.

இப்படிப்பட்டவர் விவாகரத்தானவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் திருமணமே வேண்டாம் என இருந்த வரலட்சுமி இப்போது கல்யாணத்திற்கு ரெடியாகி இருப்பதால், திரைபிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் அவருடைய 15 வயது மகள்

nicholai-sachdev-daughter-cinemapettai
nicholai-sachdev-daughter-cinemapettai

Also Read: கட்டுமஸ்தான சரத்குமாருக்கு போட்டியா வரும் புது மாப்பிள்ளை.. மோசமான பாடி பில்டர் வலையில் சிக்கிய வரலட்சுமி

Trending News