சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கிரிக்கெட் வீரர்களை மடக்கிய 5 பாலிவுட் நடிகைகள்.. கோலி பாண்டியாவின் சொகுசு வாழ்க்கை

Actresses Married to Indian Cricketers : இந்தியாவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலர் பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்து செட்டிலாகியுள்ளனர். அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்ப புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

கே எல் ராகுல்-ஆதித்ய செட்டி: பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆதித்ய ஷெட்டியை கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்தார் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல். மகளுக்கென்று திருமண பரிசாக 50 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை சீதனமாக கொடுத்துள்ளார் சுனில் ஷெட்டி. மேலும் பாலிவுட் பிரபலங்கள் பலரும்  கார், வைர வளையல், வாட்ச் என கோடிக்கணக்கில் திருமண பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்களாம் இந்த ஜோடிகளுக்கு.

விராட் கோலி-அனுஷ்கா சர்மா: விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பிரபல பாலிவுட் நடிகை ஆவார். மேலும் விளம்பரமாடல், படங்கள் என பல வகையிலும் கல்லா கட்டி வரும் அனுஷ்காவின் சொத்து மதிப்பு மட்டுமே மட்டும் 250 முதல் 300 கோடி வரை உள்ளது.

யுவராஜ் சிங்-ஹசல் கிச்: யுவராஜ் சிங்கின் மனைவி ஹசல் கிச் பாலிவுட் நடிகை ஆவார்.ஹிந்தியில் வெளிவந்த பாடிகாட் படத்தில் சல்மான் கான் மற்றும் கரீனா கபருடன் இணைந்து நடித்திருந்தார் ஹசல் கிச். மேலும் தமிழில் அஜித் நடித்து வெளியான பில்லா படத்தில் அஜித்துடன் ஒரு பாடலுக்கு நடனமாடி  இருந்தார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா -நடாஷா ஸ்டான்கோவிக்:  இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டு நடிகை நடாஷாவை 2020 ஆண்டு மே மாதம் திருமணம் செய்தார். திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்த நடாஷாவிற்கு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. திரும்பவும் தற்போது ராஜஸ்தானில் பிரம்மாண்ட முறையில் வருகின்ற காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர் இந்த ஜோடிகள். ஆடி,லம்போகினி என விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் பாண்டியாவிற்கு 6000 sq feet பங்களா ஒன்று குஜராத்தில் உள்ளது.

ஜாகீர் கான்- சகரிகா காட்கே: புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் “சக்தே”  ஹிந்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை சகரிகா காட்கேவை திருமணம் செய்துள்ளார்.  கூடுதல் செய்தி இந்தியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர் தேசிய ஹாக்கி  வீராங்கனை ஆவார்.

Trending News