ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நித்தியானந்தாவிடம் உஷாரான முன்னணி நடிகை.. மாட்டிக்கொண்ட நடிகைகளின் லிஸ்ட்!

சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய போலிச் சாமியார் நித்யானந்தா மீது பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. அத்துடன் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரின் படுக்கை அறை காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இது அனைவருக்கும் தெரிந்ததே என்றாலும் நித்தியானந்தாவுடன் தொடர்பில் இருந்த நடிகைகளைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏனென்றால் ரஞ்சிதா மட்டுமல்லாமல் கேஆர் விஜயா அவர்களின் தங்கை மகள் நடிகை ராகசுதா அவர்களும் நித்யானந்தாவிடம் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இவர்தான் நித்தியானந்தாவிற்கு முன்னாள் மற்றும் இந்நாள் நடிகைகளையும், சீரியல் நடிகைகளையும் நித்தியானந்தாவிற்கு அறிமுகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இவரைத் தொடர்ந்து நடிகை கௌசல்யாவும் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு அவ்வப்போது சென்று வருகிறாராம்.

இந்த வரிசையில் அடுத்த படியாக நடிகை யுவராணி நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இவர்களுடன் நயன்தாராவை பற்றிய திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

ஆரம்ப காலத்தில் சிம்பு, பிரபுதேவா உடன் காதல் தோல்வியை சந்தித்து, அதன்பிறகு தொடர்ந்து ஒரு சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதை தெரிந்து கொண்ட நித்யானந்தா, நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் உஷாரான நயன்தாரா, நித்யானந்தா கையில் சிக்காமல் அந்த அழைப்பை ஏற்க மறுத்து நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு செல்லவில்லையாம்.

பெண்களை கடத்தியதாக நித்யானந்தா மீது எழுந்த அடுத்தடுத்த குற்றம் சாட்டினால் தற்போது நித்தியானந்தா தலைமறைவாக வாழ்வதாகவும், தீவு ஒன்றை வாங்கி அதில் பதுங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு சினிமா பிரபலங்களை குறிவைத்து நித்தியானந்தா செய்யும் லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

Trending News