Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அனிருத் அட்ட காப்பியடித்த பீஸ்ட் படத்தின் மியூசிக்.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஆதாரம்

இளம்வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களை இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறும். அவ்வாறு அனிருத் 3 படத்தில் இசையமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியது. […]

இளம்வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களை இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறும். அவ்வாறு அனிருத் 3 படத்தில் இசையமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியது.

இது ஒருபுறம் இருக்க இவர் வேறு படத்தில் உள்ள மியூசிக்கை காப்பியடித்து தனது படங்களில் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி வருகிறது. அவ்வாறு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அரபி குத்துப்பாடல் வெளியாகி பல சாதனைகள் படைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலும் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மியூசிக்கையும் அனிருத் காப்பி அடித்துயுள்ளார்.

டி மீட்டர், ISHNLV இன் ஏடி கோலிமா என்ற பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது. இந்த ட்யூன் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமானது. பலரும் இதை தங்களது ரிங்டோனாக வைத்திருந்தனர். இந்த மியூசிக்கை தற்போது அனிருத் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனிருத்தை வருத்த எடுக்கிறார்கள். மேலும், தற்போது இணையத்தில் யுவன் ரசிகர்கள் அனிருத் மியூசிக்கை காப்பியடித்து உள்ளார் என விமர்சித்து வருகின்றனர். மேலும் அனிருத் ரசிகர்கள் இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என யுவன் ரசிகர்களுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

இதனால் இந்த இரு ரசிகர்களிடையே இணையமே ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி தாக்கிப் பேசி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் அனிருத் காப்பி அடித்தது இந்த வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் பீஸ்ட் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.